பார்ட்டிதான் இணைத்தது.. குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
சென்னை: விஜய் சேதுபதி கடைசியாக நடித்த ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்தில் நடித்திருக்கிறார். படமானது இந்த மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது. இதில் அவருடன் நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் விஜய் சேதுபதி பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் சேதுபதி மீண்டும் ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் நடித்த படங்களில் மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக ஏஸ் படத்தில் நடித்தார். மகாராஜா போல் ஹிட்டை கொடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த சேதுவுக்கு படம் பலத்த அடியை கொடுத்தது. அதேசமயம் அவரது நடிப்புக்கு பலரிடமிருந்தும் வரவேற்பு கிடைத்தது.
பாண்டிராஜுடன் கூட்டணி: அவர் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். வரும் 23ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் பாண்டிராஜ். எனவே அவருடன் விஜய் சேதுபதி இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது.

விஜய் சேதுபதியின் பேச்சு: இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, "தலைவன் தலைவி". இப்படத்தை "பாண்டிராஜுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. அவருக்கு தேசிய விருது கிடைத்தபோது நான் அவர் அருகில் இருந்தேன். அந்த மெசேஜை நான் படித்தும் காண்பித்தேன். ஆனால் ஒருகட்டத்தில் நானும், அவரும் சேர்ந்து படங்கள் பண்ண வேண்டாம் என்று பிரிந்துவிட்டோம். கடைசியில் மிஷ்கினின் பிறந்தநாள் பார்ட்டியில் மீண்டும் இணைந்தோம்.
இது என்ன மாதிரியான படம்: தலைவன், தலைவி திரைப்படம் கணவன், மனைவி உறவை, அதில் இருக்கும் சிக்கல்களை பேசுகிறது. நித்யா நடித்த ஒரு மலையாள படத்தில் நான் கெஸ்ட் ரோல் செய்திருந்தேன். அப்போதே இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பேசினோம். இப்போதுதான் நடந்திருக்கிறது. அவரை தவிர அந்த பேரரசி கேரக்டரில் யாரும் நடித்திருக்க முடியாது. படத்தில் ஒரு குழந்தையும் சிறப்பாக நடித்திருக்கிறாள். இப்படம் பார்த்தால் டைவர்ஸ் தேவைதானா என்று யோசிப்பார்கள்.
மனது வலித்தது: இந்தப் படத்துக்கு மொத்தம் மூன்று செட்டுகள் போட்டார்கள். அவற்றை பிரிக்கும் பலரது மனது கஷ்டப்பட்டது. அந்த அளவுக்கு படத்துடன் இணைந்துவிட்டோம். வேறு படத்துக்காக மதுரை சென்றிருந்தபோதுகூட இந்தப் படத்துக்குத்தானோ என்று தோன்றியது. இப்போது ட்ரோல் செய்வது அதிகமாகிவிட்டது. அதை தடுக்க முடியாது. அன்று கார்ட்டூன் போன்ற விஷயங்கள் இருதன. நமும் பலவகைகளில் கிண்டல் அடிக்கத்தான் செய்திருப்போம். ஒரு படைப்பை பொதுவெளியில் கொடுத்த பிறகு விமர்சனங்களை மறுக்க முடியாது. நம்மிடம் குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











