வாய் விட்டது வீண் போகல.. இந்தியன் 2வில் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி?

Recommended Video

60 years of Kamal Hassan | Ungal Naan | Shankar | Rajinikanth | Indian 2

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசனை சந்தித்த விஜய்சேதுபதி, அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டிருந்தார், இந்நிலையில், இந்தியன் 2 படத்திலேயே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 64 படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2வில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இந்தியன் 2 படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தியன் முதல் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் தப்பித்து வெளிநாடு சென்ற சேனாபதி மீண்டும் இந்தியாவுக்கு வந்து ஊழல்வாதிகளை களையெடுக்க உள்ளார்.

உங்கள் நான்

உங்கள் நான்

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக உங்கள் நான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, ஏற்கனவே தனக்கு கிடைத்த இந்தியன் 2 வாய்ப்பை தவறவிட்டதற்கு வருந்துவதாகவும், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் அடுத்த படத்தில் நிச்சயம் நடிப்பேன் என்றும் கூறினார்.

ரஜினியுடன்

ரஜினியுடன்

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். விக்ரம் வேதா படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதிக்கு, தொடர்ந்து பெரிய ஹீரோ படங்களில் அது போன்ற கதாபாத்திரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

என்ன ரோல்

என்ன ரோல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் தளபதி 64ல் வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதி, இந்தியன் 2விலும் கமலுக்கு வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தளபதி 64 ஷூட்டிங் வரும் பிப்ரவரியில் முடிவடைய உள்ள நிலையில், அதன் பிறகு இந்தியன் 2வில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து படக்குழு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை அறிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X