ரம்யா கிருஷ்ணனுக்கு 37 தான், ஆனால் பாவம் விஜய் சேதுபதிக்கு 90
Recommended Video

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி எப்படி கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

90 டேக்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த போது ஒரேயொரு காட்சியை 37 முறை மீண்டும் மீண்டும் நடிக்க வைத்தார் இயக்குநர் என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ரம்யா கிருஷ்ணன் பரவாயில்லை வெறும் 37 முறை தான். ஆனால் ஒரேயொரு காட்சியை விஜய் சேதுபதியை 90 முறை நடிக்க வைத்துள்ளார் குமாரராஜா.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை திருநங்கையாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். படம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை பார்க்கும்போது இது விஜய் சேதுபதியின் கெரியரில் மறக்க முடியாத படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
அனுராக் கஷ்யப்
சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப் பாராட்டியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே என்று ஃபீல் பண்ணி ட்வீட் செய்துள்ளார் அவர்.

இமைக்கா நொடிகள்
இமைக்கா நொடிகள் படத்தில் சைக்கோ வில்லனாக நடித்த அனுராக் கஷ்யப் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











