Vijay Sethupathi Net Worth: மக்கள் செல்வன் டு மகாராஜா.. விஜய் சேதுபதி சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய பின்னர், இதற்கு மேல் எனக்கு சம்பளம் பெரிய விஷயமல்ல எனக் கூறிய விஜய் சேதுபதி அந்த இடத்துக்கு வர பட்ட கஷ்டங்கள் ஏராளம். புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் சாதாரண அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த விஜய் சேதுபதி இன்று தனுஷ், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுக்கே செம டஃப் கொடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கானுக்கே வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற கேள்விகள் கிளம்பி வந்த நிலையில், நான் இருக்கேன் என வந்து 8வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வரும் விஜய் சேதுபதி இந்த வாரம் கிராண்ட் ஃபினாலேவையும் சிறப்பாக நடத்தி முடிக்கப் போகிறார்.

vijay sethupathi vijay sethupathi birthday

ஜனவரி 16ம் தேதியான இன்று விஜய் சேதுபதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், விஜய் சேதுபதி அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வளர்ந்துள்ள நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம் வாங்க..

விஜய் சேதுபதி பிறந்தநாள்: 1978ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பொங்கல் கொண்டாட்டங்களின் மத்தியில் ராஜபாளையத்தில் பிறந்தவர் தான் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. குறும்படங்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவில் எப்படியாவது நடிகனாக வேண்டும் என அவர் போட்ட உழைப்பு அதிகம். சினிமா டைரியில் தனது போட்டோவை யாருக்கும் தெரியாமல் முதல் வரிசையில் வைத்துவிட்டு வந்துவிடுவேன் என்றெல்லாம் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சென்னையில் உள்ள தன்ராஜ் பெய்டு ஜெயின் கல்லூரியில் பி.காம் வரை படித்துள்ளார்.

vijay sethupathi vijay sethupathi birthday

மக்கள் செல்வன் டு மகாராஜா: நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி உள்ளிட்ட இயக்குநர்களின் நட்பு கிடைத்தது தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் செல்வனாக மாற முக்கிய காரணமாக அமைந்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதிக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்த படமாக பீட்ஸா மாறியது. அந்த படத்தைத் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாக வெற்றிகள் குவிந்தன. கடந்த ஆண்டு வெளியான மக்கள் செல்வனின் 50வது படமான மகாராஜா அவருக்கு சீனா வரை ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் மாறியுள்ளார் விஜய் சேதுபதி.

vijay sethupathi vijay sethupathi birthday

சொத்து மதிப்பு: நடிகனாகவும் தயாரிப்பாளராகவும் மாறிய விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வான்டட் நடிகராகவும் மாறியுள்ளார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க அதிகபட்சமாக 24 கோடி வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அவருக்கு 140 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 50 கோடிக்கு பெரிய பங்களா ஒன்று வைத்துள்ள விஜய் சேதுபதி 1.78 கோடி மதிப்பில் BMW 7 சீரிஸ் காரை வைத்திருக்கிறார். மேலும், சில கார்களும் அவருக்கு உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X