அப்படி செய்திருக்க கூடாது.. காலில் விழுந்த விஜய் சேதுபதி.. பதைபதைத்த ரசிகர்கள்.. கேள்வி மேல் கேள்வி

ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Recommended Video

சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய்சேதுபதி.. கொந்தளித்த ரசிகர்கள் | Sye Raa Narasimha Reddy Pre Release Event | Vijay Sthupathi

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் சாயிரா நரசிம்ம ரெட்டி இன்னொரு பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகி உள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தியா முழுக்க இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்படி

எப்படி

இந்த படத்தின் விழாவில் நடிகர் சிரஞ்சீவி விஜய் சேதுபதி குறித்து பேசினார். அவர் தனது பேச்சில், விஜய் சேதுபதி மிகவும் பிஸியான நடிகர். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கிறார். வரிசையாக நிறைய படங்களில் இடைவெளியே விடாமல் நடித்து வருகிறார். கடினமாக உழைக்கிறார்.

வேலை முக்கியம்

வேலை முக்கியம்

இரவு,பகல் பார்க்காமல் அவர் வேலை பார்க்கிறார். அவர் அண்ணா அண்ணா என்றுதான் என்னிடம் பேசுவார். சாயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிப்பதற்கு அவர் ஏற்றுக்கொண்டது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் படத்திற்காக கடினமாக உழைத்தார் என்று குறிப்பிட்டார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இதை கேட்டதும் நடிகர் விஜய் சேதுபதி வேகமாக சிரஞ்சீவி அருகே வந்து அவரிடம் கை கொடுத்தார். அதோடு சிரஞ்சீவி பேசிக்கொண்டு இருக்கும் போதே விஜய் சேதுபதி அவரின் காலில் விழுந்தார். விஜய் சேதுபதி இப்படி செய்ததுதான் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

கால்

கால்

ஏன் இப்படி இன்னொரு நடிகரின் காலில் விஜய் சேதுபதி விழுகிறார். ஏற்கனவே தமிழ் நாட்டில் பலர் காலில் விழுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பிற மாநிலத்திற்கு சென்று, அங்கு ஒரு நடிகரின் காலில் விழுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கூடாது

கூடாது

அவர் அப்படி செய்திருக்க கூடாது என்று பலர் கூறி வருகிறார்கள். அதே சமயம் சிரஞ்சீவி பெரிய நடிகர். அவர் காலில் விஜய் சேதுபதி விழுவது தவறில்லை. இதெல்லாம் குரு - சிஷ்யன் உறவு போன்றது. அதில் எந்த விதமான தவறும் இருக்க முடியாது, என்று சிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X