விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. அட இந்த இயக்குநருடன் கூட்டணியா?.. செம காம்போவா இருக்குமே
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. எந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார். அதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவரது புதிய படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமாவில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பலரும் முட்டி மோதுவதுண்டு. அந்த வெற்றியை பெறுவதற்கு பொறுமை, திறமை, விடாமுயற்சி வேண்டுமென்பதற்கு விஜய் சேதுபதிதான் மிகச்சிறந்த உதாரணம். சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளைக்கூட உதாசீனப்படுத்தாமல் பொறுமையாக இருந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டவர் அவர். அந்தப் பொறுமைக்கும், திறமைக்கும் மதிப்பாக தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர் ஹிட்டுகள்: அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக விஜய் சேதுபதிக்கு நல்ல பெயர் கிடைத்தது. பெயர் மட்டுமில்லாமல் அந்தப் படத்துக்கு பிறகு ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தன. அதிலும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்து சினிமாவுக்கு வந்த கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமாரசாமி உள்ளிட்டோர் எல்லாம் முதல் படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைத்தார்கள். அப்படி அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாகின.
முன்னணி ஹீரோ: தொடர்ந்து ஹிட்டுகள் கொடுத்ததன் காரணமாக விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார். நிலைமை இப்படி இருக்க வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என வில்லன் ரோலினை ஏற்று அதிலும் தனி முத்திரை பதித்தார். ஆனால் வில்லனாக மட்டுமே நடிக்கக்கூடாது ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருந்தனர்.
மகாராஜா விஜய் சேதுபதி: ரசிகர்களின் கோரிக்கைப்படி மீண்டும் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறி அந்த வழியில் பயணிக்கிறார் சேது. அப்படி தனது 50ஆவது படமான மகாராஜாவில் ஹீரோவாக நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்கினார்.
அடுத்த படம்: தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவரது புதிய படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லீயின் தயாரிப்பில் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சீதக்காதி படங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











