மகாராஜா படத்துக்கு அப்புறம் மயான அமைதி.. விஜய் சேதுபதியின் அடுத்த படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) திரைப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதியன்று வெளியாகிறது. மகாராஜா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'ஏஸ் திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ் ' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.
படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்.

ஏஸ் ரிலீஸ் தேதி: மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்- கிளிம்ப்ஸ் - பாடல்- ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் 23ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படம் வெளியாகிறது. அடுத்த மாதம் சூர்யாவின் ரெட்ரோ மே 1ம் தேதி வெளியாகிறது.
மேலும், சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரியின் மாமன் உள்ளிட்ட படங்கள் மே 16ம் தேதி வெளியாகின்றன. அடுத்த மாதம் தமிழ் சினிமாவில் பல படங்கள் சம்மர் விடுமுறையை டார்கெட் செய்து வெளியாக உள்ள நிலையில், விஜய் சேதுபதி மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மிரட்டுவாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மகாராஜா மகத்தான வெற்றி: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா, திவ்யபாரதி, நட்டி நட்ராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி சீனாவில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. ஒட்டுமொத்தமாக 150 கோடி வரை அந்த படம் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகி 150 கோடி வரை லாபத்தைக் கொடுத்ததாக கூறுகின்றனர்.
ட்ரெயின்: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படமும் கடந்த ஒரு வருடமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்னமும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக பிசாசு 2 படத்திலும் ஆண்ட்ரியாவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த படத்தையும் மிஷ்கின் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில், மகாராஜா படம் 50வது படமாக வெளியாகி அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதே வெற்றியை ஏஸ் படம் கொடுக்குமா என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











