நான் இந்த இரண்டு நடிகர்களின் ரசிகன்.. ஒரு மேஜிக் இருக்கும்.. விஜய் சேதுபதி மகன் ஓபன் டாக்

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அனல் அரசு இயக்கியிருக்கும் அப்படமானது ஜூலை நான்காம் தேதி வெளியாகிறது. நேற்று படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் சூர்யாவின் நடிப்பை வெகுவாகவே பாராட்டிவருகிறார்கள். இந்நிலையில் சூர்யா கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய் சேதுபதி இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஏஸ், மகாராஜா ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் மகாராஜா திரைப்படம் மெகா ஹிட்டானது. ஏஸ் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யா சேதுபதியும் நடிகர்: சூழல் இப்படி இருக்க விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அனல் அரசு இயக்கியிருக்கும் ஃபீனிக்ஸ் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகவிருக்கிறது. சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியிருப்பதால் இந்தப் படத்தின் மீதும் ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்தது. ஆனால் சூர்யாவை சுற்றி விமர்சனங்கள்தான் எழ ஆரம்பித்திருக்கின்றன.

Vijay Sethupathi s son Surya has said that he is a fan of Vijay and Simbu
Photo Credit:

ஏன் அந்த விமர்சனம்: அதாவது சூர்யா சேதுபதி படத்தின் பூஜையில் 'அப்பா வேற நான் வேற' என்று பேசியிருந்தார். அதனை வைத்து பலரும் அவரை விமர்சிக்க தொடங்கினார்கள். அதனையடுத்து கொஞ்சம் அடங்கியிருந்த விமர்சனங்கள், சில நாட்களுக்கு முன்பு மிண்டும் எழுந்தது. சூர்யா ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுகிறார் என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். சூர்யாவும் தன்னை சுற்றி வந்த விமர்சனங்களுக்கு கொஞ்சம் எமோஷனலாகவும் பேசியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி: இது ஒருபக்கம் இருக்க சூர்யாவை ட்ரோல் செய்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்று அவரது தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. அது விவாதமான நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, 'தம்பிமாருங்க யாராவது செஞ்சிருப்பாங்க. அப்படி நடந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்' என்று பகிரங்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

சூர்யா பேட்டி: இந்நிலையில் சூர்யா சேதுபதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் விஜய் மற்றும் சிம்புவின் தீவிர ரசிகன். இரண்டு பேரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர்கள் நடந்துவரும்போது ஒரு மேஜிக் நிகழும். அவர்கள் பேசும் வசனங்கள் எல்லாம் அருமையாக இருக்கும். அவர்கள் நடித்த சில படங்களை எல்லாம் திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். மெர்சல் படத்தை 30 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

அதுவும் ரொம்ப பிடிக்கும்: செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவும் என்னுடைய அப்பாவும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி எனக்கு பிடிக்கும். அதேபோல் மாஸ்டர் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியவில்லை. ஜன நாயகன் படத்தின் க்ளிம்ப்ஸ் பார்த்த பிறகு நான் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறேன். அனல் அரசு மாஸ்டர்தான் அந்தப் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர். ஆனால் ஜன நாயகன்தான் விஜய்யின் கடைசி படம் என்பது கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X