»   »  சத்தமே இல்லாமல் ரஜினியை ஃபாலோ பண்ணும் விஜய்சேதுபதி!

சத்தமே இல்லாமல் ரஜினியை ஃபாலோ பண்ணும் விஜய்சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் யார் ஹீரோவாக நுழைந்தாலும் பிடிக்க ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடம்தான். ஆனால் அது ரசிகர்கள் மனங்களில் கட்டப்பட்ட எஃகு கோட்டை என்பது போகப்போகத்தான் புரியும். ஆனாலும் அடங்காத ஹீரோக்கள் இரண்டு படங்கள் ஹிட் ஆனாலே ரஜினியை காப்பி அடிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

விஜய் சேதுபதியோ கொஞ்சம் வித்தியாசமாக நிஜ வாழ்க்கையில் ரஜினியை ஃபாலோ பண்ணுகிறார்.

Vijay Sethupathy follows Rajini in real life

ரஜினியின் முக்கிய குணமே சிம்பிள்தான். சின்ன கேரக்டர்களில் நடிப்பவர்கள் கூட மேக்கப் இல்லாமல் வெளியே வர யோசிக்கும்போது ரஜினி மட்டும்தான் மேக்கப் இல்லாமலேயே வெளி இடங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவார். அந்த எளிமையை அப்படியே ஃபாலோ பண்ணுகிறார் விஜய் சேதுபதி.

நரைத்த தாடி, முடியுடன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமலேயே வெளி இடங்களுக்கு வருகிறார். இந்த எளிமை அவருக்கு இன்னும் பல ரசிகர்களை சம்பாதித்துத் தந்திருக்கிறது. மேலும் எந்த ரசிகராக இருந்தாலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார் விஜய் சேதுபதி.

வெல்டன் விஜய் சேதுபதி!

English summary
Actor Vijay Sethupathi is following Superstar Rajinikanth's foot steps in real life

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil