»   »  அநீதிக் கதைகள்... இது விஜய் சேதுபதியின் புதிய படத் தலைப்பு!

அநீதிக் கதைகள்... இது விஜய் சேதுபதியின் புதிய படத் தலைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி நாயகர்களில் வித்தியாசமான தலைப்புகள் அமைவது விஜய் சேதுபதிக்குத்தான்.

ஆரம்பத்திலிருந்தே இவரது படங்களின் தலைப்புகள் கவனிக்கப்படும். நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூது கவ்வும், இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காதலும் கடந்து போகும் போன்ற தலைப்புகளைத் தொடர்ந்து, இவரது அடுத்த படத்துக்கு சூட்டப்பட்டுள்ள தலைப்பு 'அநீதிக் கதைகள்'.

Vijay Sethupathy's next Aneethi Kathaigal

இந்தப் படத்தை இயக்குபவர் தியாகராஜன் குமாரராஜா. பிரமாதமாகப் பாராட்டப்பட்ட ஆரண்ய காண்டம் படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படம்தான் அநீதிக் கதைகள்.

இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் மிஷ்கின் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு இணை நாயகனாக ஃபஹத் ஃபாஸில் நடிக்கிறார்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

English summary
Vijay Sethupathy's forthcoming movie has been titled 'Aneethi Kathaigal' and directed by Thiagarajan Kumararaja of Aaranya Kaandam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil