விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் வன்மம்!
அடுத்தடுத்து புதுப் படங்களில் ஒப்பந்தமாவதில் கவனம் செலுத்துகிறார் விஜய் சேதுபதி.
கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அவர்.
'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்', இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த அவருக்கு, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் லேசான சறுக்கல்.

அடுத்து இவர் நடிப்பில் வரவிருக்கும் படம் ‘மெல்லிசை’.
இதைத் தவிர ‘வசந்தகுமாரன்', ‘இடம் பொருள் ஏவல்', புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலா படம்
இப்போது பாலா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த தகவல் வெளியான அடுத்த சில தினங்களில் அவரது அடுத்த புதுப்பட அறிவிப்பு வந்துள்ளது.

வன்மம்
இந்தப் படத்துக்குப் பெயர் வன்மம். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிப்பவர் கிருஷ்ணா. கழுகு படத்தில் நடித்தவர்.

பி கலைமணியின் உதவியாளர்
இந்தப் படத்தை இயக்குபவர் ஜெய் கிருஷ்ணா. மறைந்த திரையுலக ஜாம்பவான் பி கலைமணியிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

சுனைனா
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி சுனைனா. தமன் இசையமைக்கிறார். பால பரணி ஒளிப்பதிவை செய்கிறார்.

நாகர்கோவிலில்...
இந்தப் படத்தின் கதை குறித்து ஜெய் கிருஷ்ணா நம்மிடம் கூறுகையில், "நாகர்கோவிலைச் சுற்றி நடக்கும் கதை இது. கதை என்று இதனைக் கூற முடியாது.. மனித உறவுகள்.. அவர்களின் உணர்வுகளைத்தான் இந்தப் படத்தில் பிரதானப்படுத்துகிறேன். விஜய் சேதுபதிதான் இந்தக் கதைக்கு பொருத்தமான கதை நாயகனாக இருப்பார் என இந்தக் கதையை யோசிக்கும்போதே தீர்மானித்தேன்," என்றார்.

கமல் - கலைமணி
கமல்ஹாஸன், கலைமணி போன்ற பெரிய இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர்களிடம் பணியாற்றியவர் ஜெய் கிருஷ்ணா. அந்த அனுபவங்களைப் பற்றிக் கூறுகையில், "கலைமணியிடம் இருந்ததே எனக்குப் பெரிய அனுபவம், தகுதி என்றுதான் கூற வேண்டும். எத்தனை எத்தனையோ வித்தியாசமான கதைகள் இருக்கின்றன.. இந்தப் படத்திலிருந்து என் பயணம் தொடங்குகிறது..." என்றார்.


Click it and Unblock the Notifications











