மனச நோகடிக்காதீங்க - ரசிகர்களிடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்!
இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் ரிலீஸுக்கு முன்பாக கொடுத்த ஒரு பேட்டியை வைத்து அவரை அளவுக்கு அதிகமாக கிண்டலடித்து வருகின்றனர் சமூக இணையதளங்களில்.

மிகுந்த நம்பிக்கையுடன் அவர் அந்த பேட்டியில் பேசியிருப்பதைப் பார்த்து ஃபேஸ்புக்கில் அவரை கிண்டல் செய்தனர். ஃபேஸ்புக்கில் தொடர்ந்து இயங்கிவரும் விஜய்சேதுபதி இதைக்கண்டு ஆதங்கப்பட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "அனைவருக்கும் வணக்கம்,
இங்கு வெளியாகும் எல்லா திரைபடங்களும் முழு அர்பணிப்பு உணர்வுடன் எடுக்கப்பட்டு, நிச்சியமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன்தான் வெளியடப்படுகிறது. அப்படி வெளிவரும் திரைப்படங்களின் நிறை குறைகளை அலச எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.
ஆனால் திரைப்படக் கலைஞர்களின் மனம் புண்படும்படியான தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாக இருக்கும். நன்றி,
-இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











