Thalapathy 64: பர்ஸ்ட் ரஜினி.. இப்போ விஜய்.. திரும்பவும் வில்லனாகும் விஜய் சேதுபதி!

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: விஜய்யின் அடுத்தப் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இதையடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இப்படத்திற்கு தளபதி 64, விஜய் 64 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை சத்யன் சூரியன் ஏற்றுள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளது.

வில்லனாகும் விஜய் சேதுபதி

வில்லனாகும் விஜய் சேதுபதி

இந்நிலையில் விஜய் 64 படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, விக்ரம் வேதா படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்திலும், பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அப்படங்களில் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அதேபோல் தான் இந்த படத்திலும் அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் நிச்சயம் விஜய்க்கு நிகரான கதாபாத்திரத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய் சேதுபதி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக #Thalapathy 64 என ஹேஷ்டேக் போட்டு அதனை டிரெண்டிங்காக்கிவிட்டனர்.

பாராட்டு

பாராட்டு

தமிழ் சினிமாவில் வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, அவ்வப்போது இது போல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருவது உண்மையிலேயே மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சின்ன எதிர்மறை கேரக்டரில் நடித்தால்கூட நமது இமேஜ் மாறி விடும் என பயப்படும் நடிகர்களுக்கு மத்தியில், தன் இமேஜைப் பற்றி கவலைப்படாமல் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விஜய் சேதுபதி படங்களைத் தேர்வு செய்வது பாராட்டுக்குரியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X