விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் சங்கு தேவன்

பிரபல இயக்குநர்கள் பிரபு சாலமன், லிங்குசாமி ஆகியோரின் ஃபேவரைட் ஹீரோ விஜய் சேதுபதி. தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்த போட யாரு இவர் யோசிக்க வைத்தவர். அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பீட்சா, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், போன்ற படங்களில் நடித்து புதிய ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.
இப்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, புதிதாக "விஜய் சேதுபதி புரொடக்ஷ்ன்" எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இவரது தயாரிப்பில் முதன் முதலாக சங்குத் தேவன் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். கதைக்களம் திண்டுக்கல். ஆனால் கதாநாயகி யார் என்று இன்னமும் முடிவு செய்யவில்லை.
அட்டகத்தி, பீட்சா படங்களில் இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ள விஜய் சேதுபதி, ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











