Vijay Shah Rukh Khan: விஜய் - ஷாருக்கான் கூட்டணியில் இணையும் கமல்... அட்லீயின் மெகா பிளான்!
சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது இந்தப் படம்.
இதனையடுத்து விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அட்லீ கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய், ஷாருக்கான் கூட்டணியில் கமலும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஷாருக்கான் கூட்டணியில் கமல்ஹாசன்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜய்யின் அன்புத் தம்பிகளில் ஒருவரான அட்லீ சமீபத்தில் ஒரு தரமான அப்டேட் கொடுத்திருந்தார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ.
அதன்பின்னர் பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் அட்லீயின் மார்க்கெட் வேல்யூ தாறுமாறாக எகிறியுள்ளது. அதேபோல், அவரது அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விஜய் - ஷாருக்கான் இருவரும் இணைந்து நடிக்கும் வகையில் ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாக அட்லீ கூறியிருந்தார்.
விஜய்யும் ஷாருக்கானும் இணைந்து நடிக்க ஓக்கே சொன்னதால் தான் இந்த கதையை எழுதி வருகிறாராம் அட்லீ. இதனால், விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தளபதி 68 ஷூட்டிங் முடிந்ததும் அட்லீ ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன. இதனிடையே இக்கூட்டணியில் கமல்ஹாசனும் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் லியோ லோகேஷின் LCU ஜானரில் வெளியானது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் கமல்ஹாசனும் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அதேபோல், விக்ரம் 2ம் பாகத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது விஜய் - ஷாருக்கான் இணையும் படத்தை தயாரிக்க கமல் ரெடியாக காத்திருக்கிறாராம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பார்ட்னரான விஜய் டிவி மகேந்திரன் அட்லீயின் உறவினர் என சொல்லப்படுகிறது.
அதனால், மகேந்திரன் மூலம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். விஜய்யும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் ஒரு படத்தில் நடிக்க நீண்ட நாட்களாக காத்திருக்கிறாராம். இன்னொரு பக்கம் ஷாருக்கானும் கமலும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விஜய் - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











