இதுதான்டா சினிமா.. ஜன நாயகன் படம் கூட இப்படி இருக்காது.. ரியல் ஜன நாயகனாக மாறிய விஜய்!

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வந்திருந்தால் கூட படம் நல்லா இல்லை என்றோ பகவந்த் கேசரி ரீமேக் என்றோ விஜய்யை கலாய்த்திருப்பார்கள் என்றும் ஆனால், ஜன நாயகன் படத்தை வரவிடாமல் தடுத்த நிலையில், ரியல் ஜன நாயகனாகவே மாறிவிட்டார் விஜய் என்றும் சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்டு சூப்பர் ஸ்டார் ஆக்கிட்டாங்கன்னு ரசிகர்கள் சோஷியல் மீடியா முழுவதும் விஜய்யை எலிவேட் செய்து வருகின்றனர்.

"என் ஒரு சொட்டு வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா" என ரஜினிகாந்த் படையப்பா படத்தில் பாடியிருப்பார். முருகனின் வேலை கையில் வைத்துக் கொண்டு ஆறுபடையப்பாவாகவே பிரச்சார கூட்டங்களில் விஜய் காட்சியளித்தார்.

Vijay showing his fans and Tamil Nadu people a Real Jana Nayagan

கோலிவுட் ஜீசஸ் என ரசிகர்கள் கொண்டாடி வந்த விஜய் இனிமேல் தமிழ்நாடு ஜீசஸ் ஆக மாறிவிட்டார் என்றும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றன.

இதுதான்டா சினிமா: அர்ஜுன் ரெட்டி, அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி "ஒரு சினிமா என்ன செய்யும் என்பதற்கு இதுதான் ரியல் சாட்சி. ஒட்டுமொத்த அஸ்திவாரத்தையும், அதிகாரத்தையும் ஆட்டி பார்க்கும் வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஆன் ஸ்க்ரீனில் இருந்து ஆஃப் ஸ்க்ரீனில் மிகப்பெரிய ஆட்சியை அமைக்கப் போகும் விஜய்க்கு என் அன்பு வாழ்த்துகள் என வாழ்த்தியுள்ளார்.

சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை: விஜய்யின் வெற்றிக்கு நடிகர்களை கடந்து ஏகப்பட்ட ஹீரோயின்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை த்ரிஷா திருப்பதியில் இருந்து நேராக விஜய் வீட்டுக்கு வந்து விஜய்யை வாழ்த்தினார். அவரது பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்தா, காஜல் அகர்வால், சித்தி இத்னானி, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே என விஜய்யுடன் நடித்த நடிகைகள், நடிக்காத நடிகைகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரியல் ஜன நாயகன்: ஜன நாயகன் படத்தை முடக்கியதால் விஜய் கட்சியை ஆரம்பித்து முதல்வராகவே மாறிவிட்டார் என பாலிவுட் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் விவாதங்கள் செய்யும் அளவுக்கு விஜய் ரியல் ஜன நாயகனாகவே மாறியுள்ளார். முதல்வன், கேம் சேஞ்சர் உள்ளிட்ட ஷங்கர் படங்களை எல்லாம் நிஜத்தில் சாதித்துக் காட்டியுள்ளார் தளபதி விஜய் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போதாவது தணிக்கை குழு விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்குமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X