ஆஹா...செம ட்ரீட் தான்...சிவகார்த்திகேயன் பாடலை விஜய் பாடுகிறாரா ?

சென்னை : விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கில் செம பிஸியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை சென்னையில் ஓய்ந்துள்ளதால், பீஸ்ட் படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடக்கிறதாம்.

நெல்சன் திலீப்குமார் டைரக்ஷனில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்னா தாஸ், யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், சுனில் ரெட்டி, சிவ ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையின் போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வைரலானது ஃபோட்டோ

வைரலானது ஃபோட்டோ

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் 100 வது நாள் ஷுட்டிங் விஜய், படக்குழுவினருடன் டிரம்ஸ் வாசித்த ஃபோட்டோ வெளியாகி செம வைரலானது. இதனால் பீஸ்ட் அடுத்த அப்டேட் எப்போ வரும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதிக்கட்டத்தில் பீஸ்ட்

இறுதிக்கட்டத்தில் பீஸ்ட்

பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட முடிவடையும் நிலைக்கு வந்து விட்டதாம். இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக பீஸ்ட் படக்குழு இம்மாத இறுதியில் ஜார்ஜியா செல்ல உள்ளதாம். அதோடு படத்தின் ஷுட்டிங் முழுவதும் நிறைவடைய உள்ளதாம்.

விஜய்யே பாடுகிறார்

விஜய்யே பாடுகிறார்

இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி உள்ள இந்த பாடலை விஜய்யே சொந்த குரலில் பாட உள்ளாராம். அதனால் இந்த பாடல் வைப்ரேட்டான செம மாஸாக இருக்கும் என கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Recommended Video

Iniya, Sakshi Agarwal Speech in Naan Kadavul Illai Teaser Launch
குஷியான ரசிகர்கள்

குஷியான ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் எழுதிய பாடல் வரிகளை விஜய் பாடுகிறார் என்ற தகவல் இரண்டு ஸ்டார்களின் ரசிகர்களையும் செமயாக குஷிப்படுத்தி உள்ளது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X