பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம்

By Siva

சென்னை: விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

விஜய்யின் 44வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. அவரின் பிறந்தநாளை கொண்டாட 100 நாட்களுக்கு முன்பே அவரின் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

ட்விட்டரில் ஹேஷ்டேக் எல்லாம் உருவாக்கி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ரசிகர்கள் தான் பிறந்தநாள் கொண்டாட்ட மூடில் உள்ளனர், விஜய் இல்லை. ஆம், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் விஜய். அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலியானவர்களின் குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லையாம் விஜய்.

ஆறுதல்

ஆறுதல்

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

விஜய் தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ்

ரிலீஸ்

விஜய்யின் தந்தை நடித்துள்ள டிராபிக் ராமசாமி படம் அவரின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸாகிறது. தனக்கு மிகவும் பிடித்த விஜய்யின் பிறந்தநாள் அன்று தான் இயக்கியுள்ள டிராபிக் ராமசாமி படம் வெளியாவதில் இயக்குனர் விக்கி பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X