அப்பா போலவே அந்த சிரிப்பு.. விஜய் மகனின் முதல் ஹீரோ இவர் தான்.. லைகாவின் அடுத்த சம்பவம்!
சென்னை: இந்த ஆண்டு மிஷன் சாப்டர் 1, லால் சலாம், இந்தியன் 2 என வரிசையாக லைகா நிறுவனம் சறுக்கிய நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் இருந்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்க முடிவு செய்திருக்கிறது. 2.0 திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனதை கொண்டாடிய லைகா நிறுவனம் தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் பட அறிவிப்பை மோஷன் போஸ்டராக வெளியிட்டுள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று இரவு 11:08 மணிக்கு வெளியாகி இதுவரை யூடியூபில் நம்பர் ஒன் இடத்தில் டிரெண்டாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் 2025க்கு வெளியாகிறது என்கிற அறிவிப்பையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த அசத்தல் அறிவிப்பாக ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ யார் என்பதையும் லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
விஜய் மகன்: தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில், ஷார்ப்பாக அவரது மகன் சினிமாவில் தாத்தாவை போல இயக்குநராக அடியெடுத்து வைக்கவுள்ளார். கடந்த ஆண்டு ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் படம் பண்ணப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஒரு வருடம் ஆகியும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லையே என ட்ரோல்கள் பறந்த நிலையில், தற்போது விஜய் மகனின் படம் குறித்த அதிரடி அப்டேட் வெளியானது.

சந்தீப் கிஷன் தான் ஹீரோ: ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் ஹீரோவாக சஞ்சய் கிஷன் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது மோஷன் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. பணம், நூலகம் என ஏகப்பட்ட செட்டப்புகளுடன் சந்தீப் கிஷன் மற்றும் ஜேசன் சஞ்சய் அமர்ந்திருக்கும் மோஷன் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அப்பாவை போலவே அந்த சிரிப்பு: நடிகர் விஜய்க்கே உரித்தான சிரிப்புடன் அவரது மகன் ஜேசன் சஞ்சய் கொடுத்துள்ள போஸை பார்த்து விஜய் ரசிகர்கள் இளைய தளபதி என கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அப்பா விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமாவை இயக்கும் படிப்பை படித்து வந்த நிலையில், சில குறும்படங்களையும் எடுத்திருந்தார். இந்நிலையில், சந்தீப் கிஷனை வைத்து வரும் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பை ஜேசன் சஞ்சய் ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பான் இந்தியா சப்ஜெக்ட்: "நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்" என்கிற ஒன்லைன் சப்ஜெக்ட் உடன் உருவாக உள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகும் என்றும் சந்தீப் கிஷனுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதால் அவர் சரியான தேர்வாக இருப்பார் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் வாழ்த்துவாரா?: அரசியலில் விஜய் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் தனது செல்ல மகன் ஜேசன் சஞ்சய்க்கு விஜய்யின் வாழ்த்துகள் இருக்குமா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன. ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தின் பட பூஜைக்கு விஜய் வருவாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











