ஆளே மாறிக் கொண்டிருக்கும் விஜய்: காரணம் அட்லி
சென்னை: அட்லிக்காக விஜய் ஆளே மாறிக் கொண்டிருக்கிறாராம்.
தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி, விஜய் கூட்டணி சேர்ந்திருக்கும் படத்தின் பூஜை வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.
முன்னதாக 18ம் தேதி படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்
தளபதி 63 பெண்கள் கால்பந்தாட்ட அணியை பற்றிய கதை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அணியில் இருக்கும் 16 பெண்களுக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். பயிற்சியாளராக நடிக்க தனது உடல் அமைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறாராம் அவர். ஏற்கனவே ஃபிட்டாக உள்ள விஜய் மேலும் ஃபிட்டாகிக் கொண்டிருக்கிறார்.

தளபதி தீபாவளி
தளபதி 63 என்று தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த பொங்கல் தல, தலைவர் பொங்கலாக இருந்தாலும் தீபாவளி தளபதி தீபாவளி ஆகியுள்ளது. தளபதி தீபாவளிக்காக விஜய் ரசிகர்கள் வெயிட்டிங். முன்னதாக மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான்
தளபதி 63 படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் இசையமைப்பது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ரூபன் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். படத்திற்கு செட் அமைக்கும் பணியை கலை இயக்குனர் முத்துராஜ் துவங்கிவிட்டார்.

முக்கியத்துவம்
16 பெண்கள் கொண்ட கால்பந்தாட்ட அணிக்கு கோச்சாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் அவருக்கு இந்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











