தப்பு பண்ணிட்டேனே, தப்பு பண்ணிட்டேனே: இன்னும் புலம்பும் விஜய்

By Siva

தூள் படத்தில் நடிக்க மறுத்ததை எண்ணி விஜய் இன்னும் வருத்தப்படுகிறார்.

விஜய் தனது கெரியரில் எத்தனையோ முடிவு எடுத்துள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு முடிவை நினைத்து இன்றும் வருத்தப்படுகிறார்.

விஜயைத் தேடி வந்த தூள்

விஜயைத் தேடி வந்த தூள்

இயக்குனர் தரணி தூள் படத்தின் ஸ்க்ரிப்ட்டை எடுத்துக் கொண்டு முதலில் விஜயிடம் தான் சென்றுள்ளார். கதையைக் கேட்ட விஜய் இதெல்லாம் ஒத்து வராது என்று தீர்மானித்து தரணியிடம் ஒரு சாரி சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

தரணிக்கு கைகொடுத்த விக்ரம்

தரணிக்கு கைகொடுத்த விக்ரம்

விஜய் மறுத்ததால் தரணி அதே ஸ்க்ரிப்ட்டை தூக்கிக் கொண்டு விக்ரமிடம் சென்றார். அவரோ கதை பிடித்துவிட்டது பண்ணலாம் சார் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார். அதன் பிறகு படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்திலா நடிக்க மாட்டோம் என்றோம்: விஜய்

இந்த படத்திலா நடிக்க மாட்டோம் என்றோம்: விஜய்

விக்ரம், ஜோதிகா, ரீமா சென், விவேக் நடிப்பில் வெளியான தூள் சக்கைப் போடு போட்டது. பட்டி தொட்டியெல்லாம் தூள் பட பாடல்கள் கேட்டன. இதைப் பார்த்த பிறகு விஜய்க்கு ஒரே வருத்தமாகிவிட்டது. ஒரு நல்ல படத்தை கை நழுவவிட்டுவிட்டோமே என்று அன்றில் இருந்து இன்று வரை வருந்துகிறார்.

ஸ்க்ரிப்ட் இவ்வளவு மாறுமா?

ஸ்க்ரிப்ட் இவ்வளவு மாறுமா?

ஒரு இயக்குனர் நடிகனிடம் ஸ்கிரிப்ட்டை வாசித்துக் காட்டுவதில் இருந்து அதை படமாக எடுத்து முடிப்பதற்குள் அது எவ்வளவு மாறுகிறது என்பதை நினைத்து நினைத்து விஜய் வியக்கிறார்.

தூள் மாதிரி ஒரு படத்தை அநியாயமா விட்டுட்டோமே என்று இன்னும் புலம்புகிறார் விஜய். போனது போகட்டும் விஜய் இனியாவது சூதானமா இருங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X