விஜய் நடித்த தமிழன் படத்தில் அந்த காட்சி.. எம்ஜிஆர் பட காப்பியா?.. அட இது தெரியாம போச்சே
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்க்கு ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தாலும்; இனி விஜய் நடிக்கப்போவதில்லையா என்று ரசிகர்கள் சோகமும் அடைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் தமிழன் பட காட்சி காப்பி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
கோலிவுட்டில் அதிக வசூல் செய்யும் ஹீரோக்களில் முதன்மையாக இருக்கும் விஜய்; தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் கட்சி தொடங்கியதிலிருந்து அவருக்கும், திமுகவுக்கும் இடையேதான் வார்த்தை போர் நடந்துவருகிறது. கரூர் துயர சம்பவம் அவரது இமேஜை அதிகம் டேமேஜ் செய்தது. இருந்தாலும் கலங்காத அவர் தொடர்ந்து அரசியலில் களமாடிவருகிறார். செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சீனியர்களும் தவெகவில் இணைந்திருக்கிறார்கள்.
ஜனநாயகன் விஜய்: இது ஒருபக்கம் இருக்க இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் அப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

மிஸ் செய்யும் ரசிகர்கள்: இதுதான் கடைசி படம் என்பதால் மலேசியாவில் நடக்கும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை ஒரு கான்செர்ட் போல் நடத்துகிறார்கள். தளபதி கச்சேரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த கான்செர்ட்டில் பல பின்னணி பாடகிகள் விஜய் பட பாடல்களை பாடவிருக்கிறார்கள். இதனால் அதனை காண்பதற்கு பலரும் உச்சக்கட்ட ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் வீடியோ: சூழல் இப்படி இருக்க விஜய் நடித்த தமிழன் பட காட்சி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது, அந்தப் படத்தில் ஜூனியர் வழக்கறிஞராக இருக்கும் விஜய்யிடம் நில தகராறு பற்றி வழக்கு ஒன்றுக்காக இரண்டு பேர் வருவார்கள். அவர்களிடம் கோர்ட்டுக்கு வந்து போகும் செலவு உள்ளிட்டவைகளை ஒப்பிட்டு; நீங்களே உங்களுக்குள் பேசி முடித்துவிடலாமே என்று சொல்வார். அக்காட்சி ரொம்பவே ஃபேமஸானது.
எம்ஜிஆர் பட காட்சி: ஆனால் எம்ஜிஆர் பட காட்சியின் காப்பி என்று இப்போது தெரியவந்திருக்கிறது. எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான நீதிக்கு பின் பாசம் படத்தில்தான் அக்காட்சியை முதன்முறையாக உருவாக்கியிருக்கிறார்கள். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், "2002 இல் வெளியான 'தமிழன்' படத்தில் இயக்குனர் மஜீத் கஷ்டப்பட்டு உருவாக்கிய காட்சியை.. 1963 இல் 'நீதிக்குப்பின் பாசம்' படத்தில் அப்படியே வைத்த இயக்குனர் எம்.ஏ.திருமுகம் மற்றும் விஜய் நடித்த இந்த சீனில் நடித்த MGR.. இருவருக்கும் கண்டனங்கள்" என்று குறிப்பிட்டு கலாய்த்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











