Vijay: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விஜய்.. ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் பற்றி ஓபன் டாக்!

சென்னை: தவெக தலைவராக மாறிய பின்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கூட ஜன நாயகன் பிரச்னை பற்றி பேசாமல் இருந்து வந்த விஜய் இன்று தஞ்சையில் திடீரென ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் சிக்கல் குறித்து பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்ற நிலையில், மக்கள் பிரச்னைகளை பற்றி மட்டுமே விஜய் பேசி வந்தார். ஆனால், இன்றைய கூட்டத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு நடுவே தனது குடும்ப பிரச்னை குறித்து விஜய் ஏதாவது விளக்கம் கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு பதிலாக ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகாதது பற்றி பேசியுள்ளார்.

Vijay thanked CM MK Stalin for lend his voice on Jana Nayagan release issue at Tanjore

சோஷியல் மீடியாவில் ஜன நாயகன் ஹாஷ்டேக் விஜய் பேச்சைத் தொடர்ந்து தற்போது டிரெண்டாகி வருகிறது.

ஜன நாயகன் சென்சார் பிரச்னை என்ன ஆனது?: எச். வினோத் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. ஆனால், அந்த படத்துக்கு சென்சார் வழங்கப்படாத நிலையில், இன்னமும் வெளியாகவில்லை. மேலும், வழக்கை வாபஸ் வாங்கிய நிலையிலும், மறு தணிக்கைக்கு அனுப்பினார்களா? அல்லது அந்த படத்தின் தணிக்கை பிரச்னை என்ன ஆனது? படம் எப்போ ரிலீஸ் ஆகும் என எதுவுமே இதுவரை தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ஸ்டாலின் அங்கிள் என ஆரம்பத்தில் கிண்டல் அடித்து பேசி வந்த விஜய் தற்போது ஸ்டாலின் சார் என பேசி வருகிறார். மேலும், இன்று தஞ்சையில் பேசிய விஜய் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தது தவெகவினரையும் விஜய் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜன நாயகன் படம் வெளியாகாத நிலையில், பலரும் அதற்காக குரல் கொடுத்தனர். குறிப்பாக நம்ம சிஎம் சார் கூட குரல் கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றி என விஜய் பேசியுள்ளார்.

ஜூன் வெளியாக வாய்ப்பு இருக்கா?: கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19க்கு பதிலாக ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் வெளியாக வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். ஆனாலும், 20 நாட்கள் இடைவெளி இருந்தாலே போதும் என்றும் ஜூன் இறுதியிலோ அல்லது ஏப்ரல் இறுதியிலோ ஜன நாயகன் ரிலீஸ் ஆகும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X