ஈரோட்டில் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ.. சோஷியல் மீடியாவில் சும்மா ஹார்ட்டின் பறக்குதே.. அழகு தளபதி!
சென்னை: தவெக தலைவராக அரசியல் களத்தில் விஜய் குதித்தாலும் அவரது செல்ஃபி வீடியோவுக்காக ஏகப்பட்ட சினிமா ரசிகர்களும் காத்துக்கிடக்கத்தான் செய்கின்றனர். ஜனங்களின் நாயகனாக அரசியல் பக்கம் சென்றுள்ள விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு ஜன நாயகன் செகண்ட் சிங்கிளையும் தனது நண்பா நண்பிகளுக்காக வெளியிட காத்திருக்கிறார்.
10 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போதிலிருந்தே தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். என்னை மக்களிடம் இருந்து பிரித்து விடலாம் என சிலர் தப்புக் கணக்குப் போட்டு சில விஷயங்களை செய்து பார்த்தார்கள். ஆனால், மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு கொஞ்சமும் குறையவில்லை என்பதை ஈரோட்டு மக்கள் இன்று நிரூபித்து விட்டீர்கள் என விஜய் பேச ஒட்டுமொத்த ரசிகர்களும் தளபதி என ஆர்பரிக்கத் தொடங்கி விட்டனர்.

ஈரோட்டில் மக்களை வியாழனன்று சந்தித்து பேசிய விஜய் கடைசியாக, ஒட்டுமொத்த மக்கள் முன்பாக நின்று செல்ஃபி வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி செல்ஃபி: மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய்க்கு எதிராக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர், நெய்வேலியில் ஷூட்டிங்கில் ரசிகர்களை சந்தித்த விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அங்கே இருந்து தான் தளபதி விஜய் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் பக்கம் நகர ஆரம்பித்தார் என்றும் கூறுகின்றனர்.
ஈரோட்டில் செல்ஃபி வீடியோ: தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் மக்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டார். சிரித்த முகத்துடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை அவரது சமூக வலைதள கணக்குகளில் சற்றுமுன் பதிவிட்டுள்ளார். ஜன நாயகன் செகண்ட் சிங்கிளான "ஒரு பேரே வரலாறு" பாடல் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களுக்கு சூப்பரான ட்ரீட் கிடைத்துள்ளது.
ஜன நாயகன் செகண்ட் சிங்கிள்: அ. வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில், உருவாகியுள்ள "ஒரு பேரே வரலாறு" செகண்ட் சிங்கிள் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இந்த மாதம் இறுதியில் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











