திரிஷாவுடன் ஜோடியாக வந்த விஜய்.. அழிவென்று எச்சரிக்கும் பிரபலம்.. திமுகவில் சேருங்க என அட்வைஸ்
சென்னை: சங்கீதா கொடுத்த விவாகரத்து மனு கிளப்பிய பரபரப்பே இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமணத்துக்கு நடிகை திரிஷாவுடன் வந்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார் விஜய். பலரும் சங்கீதா குறிப்பிட்ட நடிகை திரிஷாதான் என சொல்லும் நிலையில்; இரண்டு பேரும் வருவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த செயல் விஜய்க்கு பின்னடவைத்தான் கொடுத்திருக்கிறது. மேலும் அவருக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தவர்கள் கொஞ்சம் பேக் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய்யின் மனைவி சங்கீதா பெரிய குண்டை சில நாட்களுக்கு முன்பு தூக்கி போட்டார். நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார், அதனால் எங்களுக்கு விவாகரத்து வேண்டும்; என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்து பொருளாதாரத்திலும் முடக்கினார்; ஐந்து வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறோம். என்வே எங்களுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும். வழக்கு செலவை விஜய்யே ஏற்கவும், அவரது வருமானத்துக்கு தகுந்தபடி எனக்கு ஜீவனாம்சம் கொடுக்கவும் உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இவை மட்டுமின்றி இன்னும் எக்கச்சக்கமான விஷயங்கள் அந்த மனுவில் இருந்தன.

யார் வெளியிட்டது?: இந்த விஷயத்தில் முதல் கேள்வியாக எழுந்தது என்றால், இந்த விவாகரத்து மனுவை யார் பொதுவெளிக்கு கசியவிட்டது என்பதுதான். வழக்கம்போல் தவெகவினர் இவ்விவகாரத்தின் பின்னணியிலும் திமுகதான் இருக்கிறது என கூறினார்கள். ஒருதரப்பினரோ இதை வெளியே விட்டதே விஜய் தரப்புதான்; ஒரு புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார் எனவும் கூறுகிறார்கள். பின்னணி பாடகி சுசித்ரா, இதை வெளியிட்டதே தவெகவின் ராஜ்மோகன்தான் என ஓபனாக அடித்தார்.
இரண்டாவது கேள்வி?: இதையெல்லாம் தாண்டி இன்னொரு பெரிய கேள்வி என்னவென்றால், 'சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை யார்?' என்பதுதான். பலரும் அது திரிஷாதான் என கூறினார்கள். ஆனால் சங்கீதாவே பெயரை குறிப்பிடும்வரையில் எந்த நடிகையின் பெயரையும் சொல்லக்கூடாது என்பதில் சிலர் தெளிவாகவும் இருந்தார்கள். ஆனால் விஜய்யுடன் இந்த விஷயத்தில் திரிஷாவை இணைத்து பேசியவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை நேற்று இரவு கொடுத்துவிட்டார் அவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
திரிஷாவுடன் ஜோடி: தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்துக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிஷாவுடன் ஜோடியாக வந்தார். அப்படி அவர் வந்தது மட்டுமின்றி ரவி மோகன் - கெனிஷா எப்படி ஒரே கலர் டோனில் உடைகள் அணிந்து தங்கள் உறவை பொதுவெளிக்கு அறிவித்தார்களோ; அதேபோல் இவர்களும் வந்திருந்தார்கள். இவர்கள் இப்படி வந்ததை அடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தலைப்பு செய்தியாகவும் மாறிவிட்டார்கள். பலரும் விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டினை இந்த விஷயத்தில் எடுத்திருக்கிறார்கள். நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை அண்ணா; மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல்; அவர் வேதனையில் கதறிக்கொண்டிருக்கும்போது இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை என அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
பிரசாந்த் ரங்கசாமி பதிவு: அந்தவகையில் விஜய்யின் தீவிரமான ஆதரவாளராக இருந்த பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "விஜய் அவரை அவரே அழித்துக்கொள்கிறார். தவெகவிலிருந்து வெளியேறுங்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் சேருங்கள். உங்களுக்கு அரசியலில் எதிர்காலம் இருக்கிறது. உண்மையிலேயே அரசியலில் உயர வேண்டுமென்றால் இனிமேலும் அங்கே (தவெக) இருப்பதில் எந்தவிதமான பயனுமில்லை" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















