மனைவியை கலங்காம பார்த்துக்கோ.. விஜய், திரிஷா மணமக்களுக்கு அப்படி வாழ்த்து சொன்னாங்களா?
சென்னை: தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சுரேஷின் மகன் திருமணத்துக்கு விஜய்யும், திரிஷாவும் நேற்று ஒன்றாக வந்தார்கள். சங்கீதா விவாகரத்து மனு கொடுத்திருக்கும் சூழலில்; இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து; அதுவும் ஒரே கலர் டோன் உடையில் வந்தது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. விஜய் இப்படி ஒரு செயலை செய்திருக்கவே கூடாது என அவரது ரசிகர்களில், ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் சொல்கிறார்கள்.
விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ரொம்பவே ஃபேவரைட். அவர்களுக்குள் ஸ்க்ரீனில் கெமிஸ்ட்ரி அப்படி இருக்கும் என கொண்டாடுவார்கள். இரண்டு பேரும் சேர்ந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ படங்களில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைத்து கிசுகிசு வரும். அதற்கு அவர்களது பதில் அழுத்தமான மௌனமாகவே இருக்கும். மேலும் சேர்ந்து நடிப்பதையே நிறுத்தியிருந்தார்கள். லியோதான் அவர்களை ரீ யூனியன் செய்ய வைத்தது.

சங்கீதா கேட்கும் விவாகரத்து: அரசல் புரசலாக கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் பெர்சனல் வாழ்க்கை பற்றி விரும்பத்தகாத தகவல்கள் வந்தன. அவை அனைத்தும் உண்மைதான் என சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சொல்லிவிட்டார். டைவர்ஸ் கேட்டதைவிடவும் விஜய் மீது அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள்தான் பகீர் கிளப்புகிறது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும்; அதனால் ஏகப்பட்ட மன உளைச்சல்களை தான் சந்தித்ததாகவும் கதறியிருந்தார்.
சைலெண்ட் ஆன விஜய், திரிஷா: இவ்விவகாரம் வெளியே வந்த பிறகு விஜய்யை பலரும் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் வழக்கம்போல் சைலெண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தஞ்சை கூட்டத்தில்கூட இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அதேபோல் சங்கீதா குறிப்பிடும் அந்த நடிகை திரிஷாதான் எனவும் ஒருதரப்பினர் அடித்து சொல்ல தொடங்கினார்கள். திரிஷாவும் தன் பங்குக்கு மௌனத்தையே இவ்விவகாரத்தில் பதிலாக கொடுத்தார். வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் மற்ற விஷயங்கள் தொடர்பாக போஸ்ட்டுகளையும் போட்டார்.
ஒன்றாக வந்த ஜோடி: நிலைமை இப்படி இருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று சென்னையில் திருமண விழாவுக்கு ஒன்றாக வந்தார்கள். அவர்கள் ஒரே கலர் டோனிலும் உடை அணிந்து வந்தது பல கேள்விகள் உருவாவதற்கு விதை போட்டிருக்கிறது. விஜய் இப்படி செய்திருக்கவே கூடாது என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல்; மேற்கொண்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் திரிஷாவுடன் வந்துவிட்டார். இனிமேல் இவரை நம்பி முட்டு கொடுக்க முடியாது. தவெகவிலிருந்து வெளியேறுகிறோம் என விர்ச்சுவல் வாரியர்ஸிலிருந்தே சில பதிவுகளை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.
மணமக்களுக்கு வாழ்த்து: இந்நிலையில் அவர்கள் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மேடைக்கு ஜோடியாக சென்ற விஜய் - திரிஷா; மணமகனை பார்த்து, 'மனைவியை கடைசிவரை கலங்காமல் பார்த்துக்கொள்' என வாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்களோ, 'சங்கீதாவை நாளுக்கு நாள் கலங்கடித்துவிட்டு இப்படி ஒரு வாழ்த்தா விஜய் அண்ணா?' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்த வாழ்த்து குறித்த தகவலை பகிர்ந்து, 'அடேங்கப்பா' என பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















