வொர்த் இல்லைனு திரிஷாவை சொன்னாரா விஜய்?.. தேர்தல் முடிந்ததும் ஜோடியாக வெளிநாடு பிளானாம்.. பிரபலம் ஓபன்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்தது; சங்கீதா தனது விவாகரத்து மனுவில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிட்டது. தேர்தல் நெருங்கியிருக்கும் இந்த நேரத்தில் இரண்டு பேரும் இப்படி செய்திருக்கக்கூடாது என பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும், அறிவுறுத்தல்களும் வந்தன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை விஜய் மீது சுமத்தியிருந்தார். அதை பார்த்து அனைவருமே உச்சக்கட்ட ஷாக் அடைந்தார்கள். தனது படங்களிலும், மேடைகளிலும் பெண்களின் பாதுகாவலர் போல் பேசும் விஜய் தனது மனைவியையே இப்படி கொடுமைப்படுத்தியிருக்கிறாரே என்று ஆங்காங்கே குரல்கள் கேட்க ஆரம்பித்தன.

திரிஷாவுடன் ஜோடி: இப்படிப்பட்ட நிலைமையில் திரிஷாவுடன் ஒரே காரில் வந்து திருமணத்தில் கலந்துகொண்டார். ஒன்றாக அவர்கள் மேடையில் நின்றபடி போஸும் கொடுத்தார்கள். அதை பார்த்து மேற்கொண்டு கொதித்து போனார்கள் தொண்டர்களும், ரசிகர்களும். மனைவி தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கும் நிலைமையில்; திரிஷாவுடன் அவசியம் வந்திருக்க வேண்டுமா?.. விஜய்யே அழைத்திருந்தாலும் உண்மையான அக்கறையை அவர் மீது கொண்டிருந்தால் திரிஷா வந்திருக்கமாட்டார் என்றும் குரல்கள் கேட்கின்றன.
திரிஷா அம்மாவின் செய்கை: இது ஒருபக்கம் இருக்க திரிஷாவின் அம்மா செய்யும் செயல்களும் விவாதத்தை கிளப்புகின்றன. அதாவது விஜய்க்கும், திரிஷாவுக்கும் திருமணம் உறுதி; தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டு ரீல் ஒன்று வந்தது. அதை உமா லைக் செய்திருந்தார். அதேபோல் இன்னொரு வீடியோவும் இரண்டு பேரையும் சேர்த்து வைத்து வந்தது. அதற்கும் தவறாமல் லைக்கிட்டிருந்தார். இதை பார்த்த பலரும், இருக்கும் பிரச்னையில் திரிஷாவின் அம்மா வேறு புது பிரச்னையை கிளப்புகிறார்களே என நொந்துகொண்டார்.
திரிஷாவின் அமைதி: ஆனால் திரிஷாவோ இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார். கடந்த வாரத்தில் சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார். இதற்கிடையே மகளிர் அணி கூட்டத்தில் பேசிய விஜய், 'சமீபத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு நீங்கள் எல்லாம் ஹர்ட் ஆகுகிறீர்கள். அதை பார்த்து எனக்கும் ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். அவ்வளவுக்கு வொர்த் இல்லை' என அலட்சியமாக பேசினார்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் விஜய் - திரிஷா விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், 'எம்ஜிஆரும் பல உறவுகளில் இருந்தார். கருணாநிதியும் மனைவி, துணைவி என இருந்தார். நான் ஒரு சர்வே எடுத்தேன். அதன் மூலம், திரிஷா விவகாரம் விஜய்க்கு வரக்கூடிய வாக்குகளை பாதிக்காது என்பது தெரியவந்திருக்கிறது. வொர்த் இல்லை என்று சங்கீதாவை சொன்னாரா இல்லை திரிஷாவை சொன்னாரா என்பது விஜய்க்குதான் தெரியும். தேர்தல் வரை திரிஷாவை விஜய் திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிந்த பிறகு இரண்டு பேரும் ஒன்றாக வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்' என்றார்.


Click it and Unblock the Notifications















