தோல்வியில் முடிந்த முதல் திருமணம்.. இரண்டாம் திருமணம் செய்த ‘ஜோ‘.. மனைவி யார் தெரியுமா?
சென்னை: 'கனா காணும் காலங்கள்' தொடரில் ஜோ என அழைக்கப்படும் ஜோசஃப் கதாபாத்திரத்தில் நடித்தவர் யுத்தன் பாலாஜி. ஜாலியாக பேசி மற்றவர்களை கலாய்ப்பது, ரகளை செய்வது என தொடர் முழுவதும் ஸ்கோர் செய்த யுத்தன் பாலாஜி சுஜிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள். இந்த தொடர் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் நடித்த பெரும்பாலானோர் சினிமாவில் படங்களில் நடித்தார்கள். சிலர் அடையாளம் தெரியாமல் போனார்கள். இதில் நடித்த இர்ஃபான் சினிமாவில் ஒரு சில படத்தில் நடித்து வந்த நிலையில், பின் காணாமல போனார்.

நடிகர் யுத்தன் பாலாஜி: இந்த தொடரில் ஜோ என அழைக்கப்படும் ஜோசஃப் கதாபாத்திரத்தில் நடித்தவர் யுத்தன் பாலாஜி. ஜாலியாக பேசி மற்றவர்களை கலாய்ப்பது, ரகளை செய்வது என தொடர் முழுவதும் கலப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனால், யுத்தன் பாலாஜிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த தொடரை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் ஜெர்ரி என்ற ரோலில் நடித்தார். அதன் பின், 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நடித்த பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். அந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான 'சந்தியா...சந்தியா' பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டது. அதன் பின், மெய்யழகி, நகர்வலம் ஆகிய படங்களில் நடித்தார்.
இரண்டாவது திருமணம்: நடிகர் யுத்தன் பாலாஜி, 2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர். நடிகர் யுத்தன் பாலாஜி ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி விட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது யுத்தன் பாலாஜி, சுஜிதா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களின் திருமண போட்டோவை யுத்தன் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











