அத்தனை வலிகள்.. அனைத்தையும் தாங்கினேன்.. எமோஷனலான விஜய்.. சங்கீதா பிரச்னையை சொல்றாரோ?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து களமிறங்குகிறது. இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார் விஜய். விஜய்யை பொறுத்தவரை பெரபூரிலும், திருச்சி கிழக்கிலும் களமிறங்குகிறார். இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது வென்று விட வேண்டும் என்ற திட்டத்தில்தான் அவர் இப்படி செய்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் விஜய் பேசிய ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. திமுக பல கட்சிகளுடனும், அதிமுக சில கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கின்றன. ஆவலோடு எதிர்பார்க்கப்படும் விஜய்யின் தவெக தனித்து களம் காண்கிறது. ஏற்கனவே சங்கீதா பிரச்னை தலைக்கு மேல் இருக்கும் சூழலில்; என்டிஏ கூட்டணிக்கு மட்டும் சென்றிருந்தால்; அவரது அரசியல் பயணத்துக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. நல்வாய்ப்பாக விஜய் அந்த மாதிரியான முடிவை எடுக்கவில்லை.

Vijay Unveils 234 Candidates Makes Bold Statement Ahead of TN Elections
Photo Credit:

தனித்து போட்டி: சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திப்பது என்ற முடிவில் மிக உறுதியாகவே இருந்தார். சங்கீதா மற்றும் திரிஷா பிரச்னைகள் கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டதால்; இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது என்பது உண்மைதான். அதனால்தான் தனித்து போட்டியிட கொஞ்சம் அவர் தயங்கியதாக தெரிகிறது. ஆனால் நாளாக நாளாக அந்தப் பிரச்னை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இதனால் அதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதாலும் தனித்து போட்டியிட விஜய் முடிவு செய்துவிட்டதாகவும் பனையூர் பட்சிகள் சொல்கின்றன.

வேட்பாளர்கள் அறிமுகம்: மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை கடந்த நாட்களில் அறிவித்துவிட்டன. இன்று தவெகவின் வேட்பாளர்கள் அறிமுக விழா நடந்தது. தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் சென்னையில் களம் காண்கிறார்கள். செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிபாளையம் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய்யோ பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் நிற்கிறார். ஒரு தொகுதி காலை வாரிவிட்டாலும் இன்னொரு தொகுதி காப்பாற்றிவிடும் என முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

Also Read
விஜய்யை வீழ்த்த மு.க.ஸ்டாலினின் பிளான்?.. ரஜினி, கமல் துணைக்கு.. ஆஹா இது வேற மாதிரி இருக்கே பாஸ்
விஜய்யை வீழ்த்த மு.க.ஸ்டாலினின் பிளான்?.. ரஜினி, கமல் துணைக்கு.. ஆஹா இது வேற மாதிரி இருக்கே பாஸ்

எப்படி இருக்கு வெற்றி வாய்ப்பு?: அவரது வெற்றி வாய்ப்பை பொறுத்தவரை இரண்டு தொகுதிகளிலுமே கொஞ்சம் கஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. பெரம்பூர் ஏற்கனவே திமுகவின் கோட்டையாக இருக்கிறது. அதில் இவரால் தாக்கத்தை செலுத்த முடியுமா என்பது பெரிய கேள்வி. அதேபோல் திருச்சி கிழக்கில் கிறிஸ்தவ வாக்குகள் அதிகம்தான். அதை கணக்கு செய்துதான் விஜய் அங்கே களமிறங்குகிறார். ஆனால் ஏற்கனவே அங்கே சிட்டிங் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் அதீத செல்வாக்கில் இருக்கிறார். கடந்த தேர்தலில் அவர் கிட்டத்தட்ட 53 விழுக்காடுகள் வரை வாக்குகளை வாங்கியிருந்தார். எனவே அவரை எதிர்த்தும் விஜய் களமாடுவது பெரிய கஷ்டம்தான்.

விஜய் பேச்சு: இப்படி பல சிக்கல்கள் அவரை சுற்றி இருந்தாலும் இன்று வேட்பாளர்கள் அறிவிப்பின்போது உற்சாகமாகவே காணப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள்தான் எம்.எல்.ஏ என்ற உலக சாதனையை மே 4ஆம் தேதி நிகழ்த்த வேண்டும். நான் சொகுசான வாழ்க்கை உள்ளிட்ட அத்தனையையும் வேண்டாமென்று தூக்கி எறிந்துவிட்டு உங்களுக்கு நன்றிக்கடன் செய்யவே வந்திருக்கிறேன். அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டுதான் இங்கே வந்திருக்கிறேன்" என்றார். அவர் அப்படி பேசும்போது தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள். அதேசமயம், அத்தனை வலிகளையும் தாங்குகிறேன் என சொல்கிறாரே, ஒருவேளை சங்கீதா விஷயத்தைத்தான் சொல்கிறாரோ என்றும் அங்கே குரல்கள் கேட்கத்தான் செய்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X