Vijay: "யாருப்பா இந்த சின்ன பையன்.. இதெல்லாம் ஓவர்” ரஞ்சிதமே கிஸ்ஸுடன் ரசிகர்களை கிறங்கடித்த விஜய்
சென்னை: விஜய்யின் தளபதி 68 GOAT என்ற டைட்டிலில் உருவாகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் விஜய் இருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை பார்க்க திரண்டனர். இதனையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை சந்தித்தார் விஜய்.
சின்ன பையனாக மாறிய விஜய்
விஜய்யின் 68வது படமான தளபதி 68 வேகமாக உருவாகி வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் GOAT எனப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படக்குழு அறிவித்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் GOAT படத்தின் ஷூட்டிங் சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் சென்னையில் GOAT ஷூட்டிங் வேகமெடுத்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக படக்குழு லீட் கொடுத்திருந்தது. அந்த இரண்டு கெட்டப்களுமே ரொம்பவே வித்தியாசமாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக வெளியான போஸ்டரில் விஜய்யின் இளம் வயது கேரக்டர் லுக் செம்ம மாஸ்ஸாக இருந்தது.
அதேநேரம் அந்த லுக்கை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதாவது லெஜெண்ட் அண்ணாச்சி போல விஜய் மாறிவிட்டாரா எனவும் கலாய்த்து வந்தனர். இந்நிலையில், தற்போது அதனைவிடவும் இளமையான தோற்றத்தில் விஜய் மாறிவிட்டார். GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருவதால், விஜய்யை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.

இதனையடுத்து படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது விஜய் எடுத்த செல்ஃபியும் செம்ம வைரலானது. அதில் விஜய் மீசை இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருந்தார். விஜய்யின் இந்த லுக் அவரது ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக அமைந்தது. இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் விஜர் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
இதில் விஜய் டிஷார்ட் அணிந்து ரொம்பவே சிம்பிளாக உள்ளார். அதுமட்டும் இல்லாமல் உடல் எடையை குறைத்து சின்ன பையன் லுக்கில் மிக இளமையாக தெரிகிறார். ரசிகர்களை நோக்கி ரஞ்சிதமே கிஸ் பறக்கவிட்ட விஜய், அவர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இது விஜய் தானா அல்லது அவரது மகனா எனக் கேட்டு வருகின்றனர்.
அதேபோல், "யாருப்பா இந்த சின்ன பையன்" எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விஜய்யின் இந்த லுக் படத்தில் ஸ்டைலிஷாக இருக்கும் என GOAT படக்குழுவினர் கூறி வருகின்றனர். இதனிடையே GOAT படப்பிடிப்பில் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து வருவது சமூக வலைத்தளங்களை அதிகளவில் ஆக்கிரமித்துள்ளது.


Click it and Unblock the Notifications











