Vijay: மினி தியேட்டருடன் அதி நவீன வசதி... விஜய்யின் புது BMW EV கார்... விலை எவ்ளோன்னு தெரியுமா..?
சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் - GOAT ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோட் வெளியாகும் முன்பே விஜய் அதன் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டார் போல. அதன்படி விஜய் வாங்கியுள்ள புது BMW கார் தான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.
விஜய் வாங்கிய புது BMW எலெக்ட்ரிக் கார்
கோலிவுட் ரசிகர்களின் தளபதியான விஜய், தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். கோட் - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் பிரம்மாண்டமாக உருவாகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இருந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜய் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் உட்பட மொத்த படக்குழுவினரும் செம்ம ஹைப்பில் உள்ளனர். இந்நிலையில், கோட் படத்தின் வெற்றியை விஜய் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டார். கார்களின் மீது அதிக விருப்பம் உடைய விஜய், தற்போது புதிதாக ஒரு BMW வாங்கி பிரமிக்க வைத்துள்ளார்.
முக்கியமாக இந்த BMW பலவிதங்களில் செம்ம ஹை டெக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது BMW-வின் எலெக்ட்ரிக் கார் மாடலான இது இந்தியாவில் இப்போது தான் விற்பனைக்கு வந்துள்ளதாம். BMW i7 xDrive 60 என்ற இந்த மாடல் விஜய் வாங்கியுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் என்பதும் முக்கியமானது. 31.3 இன்ச் 8K ஸ்க்ரீன், மினி ஹோம் தியேட்டர் என பல அதிநவீன டெக்னாலஜி உள்ள BMW i7 xDrive 60 கார், விஜய்யின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.
அதேபோல், விஜய்யிடம் இருக்கும் காஸ்ட்லியான கார்களின் லிஸ்ட்டில் BMW i7 xDrive 60-ம் இடம் பிடித்துள்ளது. அதன்படி, இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 2.5 கோடி ரூபாய் ஆகும். விஜய் ஏற்கனவே Rolls Royce Ghost, Toyota Innova Crysta, Range Rover Evoque, Mercedes-Benz GLA, Mini Cooper S, Audi A8, BMW X6 போன்ற கார்களை பயன்படுத்தி வருகிறார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் நெல்சன், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோரை தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்ட் அடித்தார் விஜய்.
இப்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், BMW i7 xDrive 60 கார் வாங்கியுள்ளார். இதனால் விரைவில் கோட் படக்குழுவினரையும் இந்த BMW i7 xDrive 60 காரில் ஏற்றி ரவுண்ட் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விஜய் வாங்கியுள்ள இந்த புதிய BMW i7 xDrive 60 காரில் இன்னும் பல ஹைடெக் அம்சங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











