ஃபேஸ்புக் ஆபீஸுக்கு விசிட் அடித்த முதல் தென்னிந்திய நடிகர் விஜய்
ஹைதராபாத்: இளையதளபதி விஜய் ஹைதராபாத்தில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு சென்றார்.
ஃபேஸ்புக் அலுவலகம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு வருமாறு இளைய தளபதி விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்களின் அழைப்பை விஜய் ஏற்றுக் கொண்டார்.

கொல்கத்தா
விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி படப்பிடிப்பு துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்
தான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் கடந்த 7ம் தேதி வந்தார் விஜய். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு சென்றார்.

ஊழியர்கள்
ஃபேஸ்புக் அலுவலகத்திற்குள் விஜய் நுழைந்தவுடன் அங்கிருந்த ஊழியர்கள் குஷியாகிவிட்டனர். ஊழியர்களில் பலர் விஜய் ரசிகர்கள். தங்களுக்கு பிடித்த விஜய்யுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விஜய்
ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் விரைவில் ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்குவார் என்று தெரிகிறது.

அலுவலகம்
விஜய்க்கு ஃபேஸ்புக் அலுவலகத்தை ஊழியர்கள் சுற்றிக் காட்டினர். ஃபேஸ்புக் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்து விஜய் பிரமித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











