படுகாயம் அடைந்த எலக்ட்ரீஷியனை மருத்துவமனைக்கு சென்று பார்த்த விஜய்: வீடியோ இதோ
சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த செல்வராஜை மருத்துவமனையில் பார்த்துள்ளார் விஜய்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஃபோகஸ் விளக்கு திடீர் என்று கீழே விழுந்தது.

இதில் எலக்ட்ரீஷியன் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் ராமசந்திரா மருத்துவமனைக்கு சென்று செல்வராஜை பார்த்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
விஜய் மருத்துவமனைக்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். முன்னதாக காலா படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மைக்கேல் என்பவர் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











