போலாம் ரைட்.. சென்னையில் நடக்கும் பீஸ்ட் ஷூட்டிங்கிற்கு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டில் வந்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் பீஸ்ட் கார் தான் தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காகவே மாறி இருக்கிறது.

Recommended Video

Real Heroவா இருங்க! Actor Vijayகு Chennai High Court அபராதம்

நெகட்டிவிட்டிகளை பாசிட்டிவிட்டியாக மாற்றி தனது ரூட்டில் போலாம் ரைட் என முன்னேறி செல்லும் நடிகர் விஜய் இன்று சென்னையில் நடைபெறும் பீஸ்ட் படத்திற்கு தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரிலேயே வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் புகைப்படங்களும் விரைவில் சமூக வலைதளங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்கார் படத்திலேயே

சர்கார் படத்திலேயே

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சர்கார் படத்திலேயே தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் நடிகர் விஜய் வந்து இறங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த படத்திற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனியாக நடத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் போட்டோஷூட் படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னையில் ரைடு

சென்னையில் ரைடு

சமீபத்தில் நடிகர் விஜய் சென்னையில் தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் சென்னையை வலம் வந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கிற்கும் விஜய் கோஸ்ட் காரில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பு எங்கே

படப்பிடிப்பு எங்கே

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்று காலையும் நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரிலேயே கெத்தாக வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார் சீன் இருக்கா

கார் சீன் இருக்கா

தனது விலை உயர்ந்த காரில் நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் கேட்டதை போலவே பீஸ்ட் படத்திலும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இருக்கும் காட்சிகள் படமாக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

வருமான வரித்துறை பிரச்சனை மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற போது நெய்வேலியே அதிரும் அளவுக்கு நடிகர் விஜய் தனது ரசிக பலத்தை காட்டும் விதமாக மாஸ் செல்ஃபி எடுத்து போட்டது போல ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருடன் தளபதி விஜய் ஒரு சூப்பரான செல்ஃபி எடுத்து வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X