ராதிகா சரத்குமார் வீட்டுக்கு சென்ற விஜய்.. இறங்கிவந்த தளபதி.. ரசிகர்கள் செம நெகிழ்ச்சி

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் ராதிகா சரத்குமாரின் வீட்டுக்கு ஒருமுறை விஜய் சென்ற விஷயம் தெரியவந்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

Vijay Radhika Sarathkumar

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

அடுத்த படம்: கோட் படத்தை முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தவிருக்கும் விஜய் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் ஹெச்.வினோத் தனித்து விளங்குகிறார். எனவே அவரது இயக்கத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று விஜய் கணக்கு போட்டிருக்கிறார். மேலும் அந்தப் படம் அரசியல் டச்சில் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

வீட்டுக்கு சென்ற விஜய்: இந்நிலையில் ராதிகா சரத்குமாரின் வீட்டுக்கு விஜய் சென்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஒருமுறை ராதிகாவின் வீட்டுக்கு சென்றிருந்த விஜய்யை பார்த்த அவரது மகன் ராகுல், சரத்குமாருக்கு ஃபோன் செய்திருக்கிறார். உடனே சரத்குமாரோ நான் வெளியே இருக்கேன் விஜய் என்றதும்; நான் உங்களை பார்க்க வரவில்லை; ராகுலுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லலாம் என வந்ததாக கூறியிருக்கிறார்.

அப்போது ராகுல் சிறுவனாக இருந்தாராம். அதற்கு பிறகு வாரிசு படத்தில் நடித்தபோது விஜய்யிடம் சரத்குமார், 'எனது மகன் கேர்ள் ஃப்ரெண்டை பற்றி பேசுகிறான் விஜய்' என்றதற்கு; அதற்கு விஜய்யோ, விடுங்க சார் இதுதான் வயது என்று சொல்லி கூல் செய்தாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் செம கேஷுவலாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X