ஜனநாயகன் படத்தோட அந்த சீன் தேர்தலுக்கு முன்னாடி வெளியாகப் போகுதா?.. விஜய்யின் பக்கா பிளான்!

சென்னை: மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் இன்னமும் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்காமல் உள்ள நிலையில், அரசியலில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார் விஜய். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது என்றும் துரந்தர் 2, தி கேரளா ஸ்டோரி 2 உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியாகி விட்டதாக ஏகப்பட்ட விமர்சனங்களும் கிளம்பின.

Vijay will plan to release a political scene from Jana Nayagan before Election buzz trending
Photo Credit:

தணிக்கை குழு என்பதே காலாவதியான ஒன்று ஓடிடியில் அத்தனை நிர்வாணக் காட்சி படங்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டே நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலேயே கிடைக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

சீமான் படங்கள் வருது: சீமான் நடித்துள்ள எல்ஐகே திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகப் போகிறது. சத்யராஜின் அமைதிப்படை ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. தொடர்ந்து பல அரசியல் ரீதியான படங்கள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் படத்துக்கு மட்டும் ஏன் தடை என தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் முடியும் வரை வெளியாகாது: ஜன நாயகன் திரைப்படம் தேர்தல் முடியும் வரை வெளியாக வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் மட்டுமே படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்கின்றனர். விஜய்யின் கடைசி படத்தால் விஜய்யின் அரசியல் களத்துக்கு எந்தவொரு மைலேஜும் கிடைக்காதே என பலரும் நினைத்துக் கொண்டிருக்க பக்காவான ஒரு பிளானை தளபதி வைத்துள்ளார் என்கின்றனர்.

ஜன நாயகன் அரசியல் க்ளிம்ப்ஸ்: ஏற்கனவே ஜன நாயகன் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது தான் அந்த படத்தை தேர்தலுக்கு முன்னதாக ரிலீஸ் செய்துவிடக் கூடாது என ஒரு கூட்டம் தடுப்பதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக ஜன நாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகள் அடங்கிய ஒரு ஸ்நீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கண்டிப்பாக அப்படி வெளியானால் ஜன நாயகன் படம் வெளியாகி என்னவொரு இம்பேக்ட்டை செய்யுமோ அதை அந்த காட்சியே செய்துவிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X