ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார்

தந்தை வழியில் பாடகரானவர் விஜய். தமிழ், மலையாளம் என பாடிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் தந்தை அளவுக்கு இவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.
இந்த நிலையில் இப்போது நடிகராக புது அவதாரம் பூணுகிறார் விஜய் ஜேசுதாஸ். மலையாளத்தில் அறிமுக இயக்குநர் நந்தன்காவில் என்பவர் இயக்கும் அவன் என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நாயகனாக நடிப்பவர் தமிழ் நடிகர் பாலா.
அடுத்த சில வாரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே பலமுறை நடிகக்க கேட்டு விஜய்யை அணுகினராம் மலையாளத்தில். அவர்தான் நடிக்க மறுத்து வந்தார். இந்த நிலையில் அவன் படத்தில் தனது கேரக்டர் பிடித்துப் போய் விட்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
2000மாவது ஆண்டுதான் பாடகராக அறிமுகமானார் விஜய் ஜேசுதாஸ். மலையாள பாடகர் ஒருவர் நடிகராவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பின்னணிப் பாடகிகளான ஜோத்சனா ராதாகிருஷ்ணன், ரஞ்சினி ஜோஸ் ஆகியோரும் நடிப்பை சுவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











