'தல'க்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள், 'தளபதி'க்கு இன்னும் ஒன்னு கூட கிடைக்கலையே
சென்னை: இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய்க்கு ஒரு ஃபில்ம்ஃபேர் விருது கூட கிடைக்கவில்லையே.
விஜய் குழந்தை நட்சத்திரமாக 5 படங்களில் நடித்துள்ளார். அது தவிர்த்து அவர் இதுவரை 56 படங்களில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றங்களையும் சேர்த்து தான். தமிழக அரசின் விருதுகளை வாங்கிய அவருக்கு டாக்டர் பட்டம் கூட கொடுத்தனர். ஆனால் இந்தியன் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஃபில்ம்ஃபேர் விருது ஒன்று கூட கிடைக்கவில்லையே.
50 படங்களைத் தாண்டியும் அவருக்கு ஃபில்ம்ஃபேர் விருது மட்டும் எட்டாத கனியாக உள்ளதே.

போக்கிரிக்கு பரிந்துரை
கடந்த 2007ம் ஆண்டு போக்கிரி படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபில்ம்ஃபேர் விருதுக்கு விஜய் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் விருது கிடைக்கவில்லை.

அஜீத் குமாருக்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள்
கமல் பெயரைச் சொன்னாலே ரஜினியின் பெயர் வருவது போல் விஜயை பற்றி பேசினால் அஜீத் பேச்சும் வரும். அஜீத் குமார் வாலி, வில்லன், வரலாறு படங்களுக்காக 3 முறை சிறந்த நடிகருக்கான ஃபில்ம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் பில்லா மற்றும் மங்காத்தா படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

விஜய்க்கு இனியாவது ஃபில்ம்ஃபேர் கிடைக்குமா?
போனது போகட்டும் விஜய்க்கு இனியாவது ஃபில்ம்ஃபேர் விருது கிடைக்கட்டும். என்ன சொல்றீங்க?


Click it and Unblock the Notifications











