ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ஆட்டோகிராப்பில் நடிக்க மறுத்த விஜய் இப்போது சேரனின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சேரன் தனது ஆட்டோகிராப் கதையை முதலில் விஜய்யிடம் சொன்னார். ஆனால் இந்தக் கதை தனது இப்போதையவேகத்திற்கு ஒத்துவராது, இவ்வளவு மென்மையான ஹீரோவாக என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்என்று கூறி நடிக்க மறுத்து விட்டார்.

இதையடுத்துதான் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்து ஆட்டோகிராப்பை எடுத்து முடித்து சரித்திரம்படைத்தார் சேரன். ஆட்டோகிராபுக்கு கிடைத்த அமோக வெற்றியைப் பார்த்து வியந்து போன விஜய், இந்தப்படத்தில் நாம் நடிக்காமல் விட்டு விட்டோமே என்று அங்கலாய்த்துள்ளார்.

இந் நிலையில் சேரனின் அடுத்த படத்தில் நடிக்க விஜய் சம்மதித்துள்ளார். விஜய்க்காகவே ஒரு ஸ்பெஷல் கதையைஉருவாக்கியுள்ளாராம் சேரன். இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தனது சூர்யா மூவிஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

விஜய் தற்போது திருப்பாச்சியில் பிசியாக உள்ளார். அதேபோல் சேரனும் டூரிங் டாக்கீஸ் மற்றும் பொக்கிஷம்படங்களில் பிஸியாக உள்ளார். எனவே இரண்டு பேரும் தங்களது படங்களை முடித்தவுடன் விஜய்யும், சேரனும்கை கோர்க்கும் படம் உருவாகுமாம்.

பெண் போலீஸ் வேலையில் சேர வந்த சுஜாதா என்ற பெண்ணுக்கு டூரிங் டாக்கீஸ் படத்தில் (பெயர் மாறும்வாய்ப்புள்ளது) சேரனுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்த கதையை நமது வாசகர்கள் அறிவார்கள். இந்தப் படத்தின்சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், டைரி என்று ஒரு படத்திற்கு பெயர் சூட்டி அதை பிலிம் சேம்பரில்பதிவும் செய்துள்ளார் சேரன்.

சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர் யாரும் இல்லாத ஒரு அநாதை கடைசியில் மரணத்தைத் தழுவுகிறான்.அவனது வாழ்க்கை அவனது டைரி மூலம் வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. அந்த டைரியில்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் தொகுப்பே டைரி படத்தின் கதையாம்.

பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் மூலம் ரசிகர்களின் மனதை சலனப்படுத்திய சேரன், டைரி மூலம் ரசிகர்களைமேலும் ஒரு படி மேலே போய் சிந்திக்கவும் வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் அநேகமாக சேரனே ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X