ஹீரோ .. ஹீரோ ..
விஜய்க்கும் அந்த ஆசை வந்து விட்டதாம். பயந்துவிட வேண்டாம், எல்லாம் இரட்டை வேட ஆசை தான்.
வாலிக்குப் பிறகு அஜீத் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் நன்றாகப் போய்க் கொண்டுள்ளது. விடுவாரா விஜய்.
சரண் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார். இதற்காக ஒருவேடத்திற்கு வித்தியாசமான கெட்டப் போடவுள்ளனராம்.
இந்தப் படத்தை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது. சரணை வைத்து பாலசந்தர் தயாரிக்கும் முதல்படம் இது. சரண் படத்தில் விஜய் நடிக்கும் முதல் படம் இது.
விஜய்யின் காஸ்ட்யூம்களை கவனிக்கப் போவது அவரது மனைவி சங்கீதா தான்.
கமல் படங்களின் காஸ்ட்யூம் டிசைனராக அவரது மனைவியே இருப்பது வழக்கம். முதலில் வாணி கணபதிஇருந்தார், பிறகு சரிகா இருந்தார். இப்போது யார் என்று தெரியவில்லை.
அந்த வழியை இப்போது விஜய்யும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார். யூத் படத்திலிருந்து அவரது மனைவிசங்கீதாதான், விஜய்யின் ஆடைகளை செலக்ட் செய்து, டிசைன் செய்கிறார்.
பகவதி படத்தில் விஜய்யின் டெண்டுல்கர் ஸ்டைல் தலையலங்கார மாற்றத்திலும் சங்கீதாவுக்கு பங்குண்டுஎன்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











