ஹீரோ .. ஹீரோ ..
திருப்பாச்சியில் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி ஒரு வில்லனை நடிகர் விஜய் கொலை செய்யும் காட்சியைத் திரையிட சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இக் காட்சியைத் தடை செய்யக் கோரி கோத்ரெஜ் சாராலி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் ஹிட் என்ற பெயரில் கொசு மற்றும் ஈக்களை ஒழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை விற்பனை செய்து வருகிறது.
திருப்பாச்சி படத்தில் விஜய் இந்த ஹிட் மருந்தை வில்லன் நடிகர் சூர்யா வாயில் பீய்ச்சி அடித்து கொலை செய்வது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது ஹிட்டைக் காட்டி, இது கருவில் உள்ள குழந்தைகளைக் கூட கொல்லும் என்று வசனம் பேசுகிறார்.
ஹிட்டைப் பயன்படுத்தி ஈ மற்றும கொசுக்களை மட்டுமே கொல்ல முடியும் என்று நாங்கள் விளம்பரம் செய்து வருகிறோம். ஆனால் இதைவைத்து மனிதர்களைக் கொலை செய்யலாம் என்ற தவறான கருத்து திருப்பாச்சி படத்தின் மூலம் பரப்பப்படுகிறது.
எனவே படத்தில் வரும் இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும் திருப்பாச்சி படத்தில் ஹிட் தொடர்பான காட்சியைவசனத்துடன் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்தார்.


Click it and Unblock the Notifications











