ஹீரோ .. ஹீரோ ..
விஜய் படு கடுப்பாக உள்ளார். சமயம் பார்த்து காலை வாரி விட்டுவிட்டாரே என்று ரோஜா கம்பைன்ஸ் படக் கம்பெனியின் அதிபர் காஜாமொய்தீன் மீது எரிச்சலுடன் உள்ளார்.
விஷயம் வேறு ஒன்றுமில்லை. விஜய் நடித்து தேவையில்லாத பலசர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கீதை படத்தின் தலைப்பை ஆட்சேபித்து,இந்து முன்னணி, சிவசேனா அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால்,பயந்து போன கீதை படத் தயாரிப்பாளர்கள், படத்தில் விஜய்யின்கேரக்டர் பெயரான சாரதி என்பதையே படத்துக்கு பெயராக வைக்கமுடிவு செய்தார்களாம்.
ஆனால், ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம், ஏற்கனவே சாரதி என்ற பெயரைபதிவு செய்து வைத்திருந்தது. இதனால் கீதை குழுவினர், காஜாமொய்தீனை அணுகி, சாரதி டைட்டிலை விட்டுக் கொடுக்குமாறுகோரியுள்ளனர்.
ஆனால் காஜா பாய் மறுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றிபுதியகீதை என்று படத்தின் டைட்டிலை மாற்றி படத்தை வெளியிட்டனர்.
முதல் இரு வாரங்கள் கூட்டத்தை இழுத்த இந்தப் படம் இப்போதுதியேட்டர்களில் காத்தாடுகிறது. விஜய்யின் தோல்விப் பட வரிசையில் இதுவும்சேர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
காஜா மொய்தீன் எப்போதுமே விட்டுக் கொடுத்துச் செல்பவர். யார்மனதையும் புண்படுத்தாதவர் என்று கோலிவுட்டில் அவருக்கு நல்லபெயர் உண்டு.
ஆனால், விஜய்யே போய் நேரில் கேட்டும் கூட படத்தின் டைட்டிலைஅவர் தானம் செய்ய மறுத்துவிட்டது பலருக்கும் ஆச்சரியத்தைஏற்படுத்தியது.
ஆனால் உண்மையான காரணமே வேறாம். அதாவது,கீதை படத்தைமுதலில் படமாக்குவதாக இருந்ததே காஜா மொய்தீன்தானாம். கீதைகதையுடன் வந்த டைரக்டரையும் வைத்துக் கொண்டு விஜய்யுடன்பேசினாராம்.
முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் கடைசி நேரத்தில் காலைவாரிவிடவே கீதை ஐடியாவை டிராப் செய்து விட்டாராம் காஜாமொய்தீன்.
ஆனால், டைரக்டரையும் கீதை கதையையும் தள்ளிக் கொண்டு வேறொருதயாரிப்பாளரிடம் போன விஜய் அவரை வைத்து படத்தை எடுத்து ரிலீஸ்செய்தார்.
இப்போது புரிந்திருக்குமே விஜய்க்கு காஜா மொய்தீன் ஏன் கடுக்காய்கொடுத்தார் என்பது!!


Click it and Unblock the Notifications











