விஜய்யுடன் மோதல் இல்லை- ரஜினி எனக்கும் நடிகர் விஜய்க்கும் எந்தவித மோதலும் இல்லை, அவர் எனது ரசிகர், நான் அவரது நலம் விரும்பி எனநடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.விஜய், திரிஷா நடித்த கில்லி படத்தின் 200வது நாள் விழா நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விஜய்உள்ளிட்டவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். நடிகர்கள் விக்ரம், பிரகாஷ் ராஜ், நடிகைகள் திரிஷா,அசின், நிலா, இயக்குநர்கள் தரணி, பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகர், தியாகராஜன்,அழகப்பன், இசையமைப்பாளர் வித்யாசாகர் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.ரஜினி பேசுகையில், சந்திரமுகியின் 100வது நாள் விழாவுக்குத்தான் வருவதாக இருந்தேன். ஆனால்இந்தவிழாவை நான் ஒத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் உள்ளது.சந்திரமுகி ரிலீஸின்போது சச்சின் படமும் ரிலீஸ் ஆனதால், எனக்கும், விஜய்க்கும் தகராறு என்று செய்திகள்வந்தன. அந்த செய்தியைப் பொய்யாக்குவதற்காகத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன்.எனக்கும், விஜய்க்கும் எந்தத் தகராறும் கிடையாது. அவர் எனது ரசிகர், நான் அவரது நலம் விரும்பி, அபிமானி.விஜய் நன்றாக நடிக்கிறார். கில்லியில் அவரது காமடி சிறப்பாக இருந்தது. அதேபோல, திருப்பாச்சியில் வசனஉச்சரிப்பு பிரமாதமாக இருந்தது.விஜய்யையும், விக்ரமையும் பார்க்கும்போது அந்தக் கால ரஜினி, கமலைப் பார்ப்பது போல இருக்கிறது.ஒரு ரீமேக் படத்தை எடுக்கிறபோது அதில் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதை அனுபவப்பூர்வமாக நான்சொல்கிறன். கில்லியை தரணி மிகச் சிறப்பாக எடுத்திருந்தார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.பிரகாஷ் ராஜும் இதில் அற்புதமாக நடித்திருந்தார். அவர் இன்னொரு ரங்காராவ். அதே போல திரிஷா. அவரைமலேசியாவில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் சந்தித்தேன். அவரது முகம் அழுவது போலவே இருக்கும். ஆனால்கண்கள் மட்டும் சிரித்துக் கொண்டிருக்கும்.உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். நல்ல முறையில் சம்பாதித்தால்தான் அதுநிலைக்கும். இல்லையென்றால் அது போய் விடும். எல்லோரும் சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்கவேண்டும். நாமும் சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நமக்கு இருக்கவேண்டும். அப்படி நினைத்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றார் ரஜினிகாந்த்.

By Staff

எனக்கும் நடிகர் விஜய்க்கும் எந்தவித மோதலும் இல்லை, அவர் எனது ரசிகர், நான் அவரது நலம் விரும்பி எனநடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

விஜய், திரிஷா நடித்த கில்லி படத்தின் 200வது நாள் விழா நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விஜய்உள்ளிட்டவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். நடிகர்கள் விக்ரம், பிரகாஷ் ராஜ், நடிகைகள் திரிஷா,அசின், நிலா, இயக்குநர்கள் தரணி, பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகர், தியாகராஜன்,அழகப்பன், இசையமைப்பாளர் வித்யாசாகர் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ரஜினி பேசுகையில், சந்திரமுகியின் 100வது நாள் விழாவுக்குத்தான் வருவதாக இருந்தேன். ஆனால்இந்தவிழாவை நான் ஒத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் உள்ளது.


சந்திரமுகி ரிலீஸின்போது சச்சின் படமும் ரிலீஸ் ஆனதால், எனக்கும், விஜய்க்கும் தகராறு என்று செய்திகள்வந்தன. அந்த செய்தியைப் பொய்யாக்குவதற்காகத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன்.

எனக்கும், விஜய்க்கும் எந்தத் தகராறும் கிடையாது. அவர் எனது ரசிகர், நான் அவரது நலம் விரும்பி, அபிமானி.விஜய் நன்றாக நடிக்கிறார். கில்லியில் அவரது காமடி சிறப்பாக இருந்தது. அதேபோல, திருப்பாச்சியில் வசனஉச்சரிப்பு பிரமாதமாக இருந்தது.

விஜய்யையும், விக்ரமையும் பார்க்கும்போது அந்தக் கால ரஜினி, கமலைப் பார்ப்பது போல இருக்கிறது.

ஒரு ரீமேக் படத்தை எடுக்கிறபோது அதில் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதை அனுபவப்பூர்வமாக நான்சொல்கிறன். கில்லியை தரணி மிகச் சிறப்பாக எடுத்திருந்தார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

பிரகாஷ் ராஜும் இதில் அற்புதமாக நடித்திருந்தார். அவர் இன்னொரு ரங்காராவ். அதே போல திரிஷா. அவரைமலேசியாவில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் சந்தித்தேன். அவரது முகம் அழுவது போலவே இருக்கும். ஆனால்கண்கள் மட்டும் சிரித்துக் கொண்டிருக்கும்.

உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். நல்ல முறையில் சம்பாதித்தால்தான் அதுநிலைக்கும். இல்லையென்றால் அது போய் விடும். எல்லோரும் சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்கவேண்டும். நாமும் சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நமக்கு இருக்கவேண்டும். அப்படி நினைத்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றார் ரஜினிகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X