twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகாசியில் விஜய்.. ஆட்டம், பாட்டம் சிவகாசி பட நாயகனான இளைய தளபதி விஜய், பட்டாசு நகரான சிவகாசிக்கு சென்று ரசிகர்களுடன் ஆட்டமாடி, பாட்டுப் பாடி,தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்தார்.விஜய் நடித்துள்ள சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பட்டாசு நகரான சிவகாசியின் பெயரை படத்திற்குவைத்துள்ளதால், சிவகாசிக்கு சென்று அங்கு பட்டாசுத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுடன்தீபாவளியை முன் கூட்டியே கொண்டாட விரும்பினார் விஜய்.இதன்மூலம் படத்துகுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதன்படி அவரும், தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரும், விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். மதுரையிலிருந்து கார் மூலம் இருவரும் சிவகாசிசென்றனர். வழியெங்கும் விஜய் ரசிகர்கள் திரளாக கூடி அவரை வரவேற்று திக்குமுக்காட வைத்தனர். விமான நிலையத்திலிருந்து தொடங்கிசிவகாசி வரை விஜய் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்.மதுரையில் திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பெருமளவில் ரசிகர்கள் நின்று விஜய்யை வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசிகர்களை அசத்தவும் விஜய் தயங்கவில்லை.செவரக்கோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென காரை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக் கடைக்குள் புகுந்து அங்குடீ அடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ. 2,000 தீபாவளிப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் விஜய்.பின்னர் விருதுநகர் பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு குட்டி நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரம்,ஊனமுற்றோருக்க சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். அங்கிருந்து கிளம்பிய விஜய்க்கு திருத்தங்கலில் யானை புடை சூழபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்தே ஆரம்பித்தது விஜய்யின் ஆரவார கொண்டாட்டம். சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைக்கு சென்ற அவர் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார். இந்த சமயத்தில் அவருடன் நடிகை சொர்ணமால்யாவும் இணைந்து கொண்டார். பிறகு சாட்சியாபுரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்குஇனிப்புகள் கொடுத்தார்.அவர்களில் சிலர் விஜய் படத்தில் வரும் சில பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் நகராட்சிப் பள்ளிக்குச் சென்ற விஜய், அங்குநடந்த சிலம்பப் போட்டியைப் பார்த்தார். சிறிது நேரம் தானும் களமிறங்கி சிலம்பம் சுற்றி ரசிகர்களைகுஷிப்படுத்தினார். பின்னர்அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தார்.திடீரென விஜய்யும் மேடையேறி தப்பாட்டம் ஆடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

    By Staff
    |

    சிவகாசி பட நாயகனான இளைய தளபதி விஜய், பட்டாசு நகரான சிவகாசிக்கு சென்று ரசிகர்களுடன் ஆட்டமாடி, பாட்டுப் பாடி,தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்தார்.

    விஜய் நடித்துள்ள சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பட்டாசு நகரான சிவகாசியின் பெயரை படத்திற்குவைத்துள்ளதால், சிவகாசிக்கு சென்று அங்கு பட்டாசுத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுடன்தீபாவளியை முன் கூட்டியே கொண்டாட விரும்பினார் விஜய்.

    இதன்மூலம் படத்துகுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதன்படி அவரும், தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரும், விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். மதுரையிலிருந்து கார் மூலம் இருவரும் சிவகாசிசென்றனர்.


    வழியெங்கும் விஜய் ரசிகர்கள் திரளாக கூடி அவரை வரவேற்று திக்குமுக்காட வைத்தனர். விமான நிலையத்திலிருந்து தொடங்கிசிவகாசி வரை விஜய் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்.

    மதுரையில் திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பெருமளவில் ரசிகர்கள் நின்று விஜய்யை வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசிகர்களை அசத்தவும் விஜய் தயங்கவில்லை.

    செவரக்கோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென காரை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக் கடைக்குள் புகுந்து அங்குடீ அடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ. 2,000 தீபாவளிப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் விஜய்.

    பின்னர் விருதுநகர் பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு குட்டி நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரம்,ஊனமுற்றோருக்க சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். அங்கிருந்து கிளம்பிய விஜய்க்கு திருத்தங்கலில் யானை புடை சூழபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.


    அங்கிருந்தே ஆரம்பித்தது விஜய்யின் ஆரவார கொண்டாட்டம். சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைக்கு சென்ற அவர் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார்.

    இந்த சமயத்தில் அவருடன் நடிகை சொர்ணமால்யாவும் இணைந்து கொண்டார். பிறகு சாட்சியாபுரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்குஇனிப்புகள் கொடுத்தார்.

    அவர்களில் சிலர் விஜய் படத்தில் வரும் சில பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் நகராட்சிப் பள்ளிக்குச் சென்ற விஜய், அங்குநடந்த சிலம்பப் போட்டியைப் பார்த்தார். சிறிது நேரம் தானும் களமிறங்கி சிலம்பம் சுற்றி ரசிகர்களைகுஷிப்படுத்தினார். பின்னர்அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தார்.

    திடீரென விஜய்யும் மேடையேறி தப்பாட்டம் ஆடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

      Read more about: vijay in sivakasi
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X