twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன் டிவி பேட்டி: தடுக்க கோரும் விஜய் சன் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ள தனது நிகழ்ச்சியைநிறுத்துமாறு நடிகர் சங்கத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாக நடிகர் விஜய்கூறியுள்ளார்.தொலைக்காட்சிகளுக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் யாரும் பேட்டியோ,நிகழ்ச்சிகளோ நடத்தித் தரக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்தனியார் தொலைக்காட்சிகளின் தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நடிகர்,நடிகைகளின் சமீபத்திய பேட்டிகள் இடம் பெறவில்லை.பழைய நிகழ்ச்சிகளுக்கு புது உருவம் கொடுத்தும், மலையாள, தெலுங்குத்திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பவும் சன், ஜெயா,ராஜ் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் முடிவு செய்துள்ளன.இந் நிலையில் சன் டிவியின் நிகழ்ச்சி நிரலில் விஜய்யின் நிகழ்ச்சியும்இடம்பெற்றுள்ளது. இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், நடிகர்கள் யாரும் எந்தத் தொலைக்காட்சிக்கும் பேட்டி தரக் கூடாது என்றநடிகர் சங்கக் கட்டுப்பாட்டின்படி நான் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் சமீபகாலமாகபேட்டி கொடுக்கவில்லை. ஆனால் நான் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியான ஆதி படத்துக்காக சன்தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியை இப்போது தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒளிபரப்பஇருக்கிறார்கள் என்று அறிகிறேன்.ஆகவே நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டின்படி இதை நிறுத்தி, தடை செய்வதற்கானமுழு அதிகாரத்தையும் நடிகர் சங்கத் தலைவர், செயலாளருக்கு தருகிறேன் என்றுகூறியுள்ளார் விஜய்.ஆனால் நடிகர் சங்கம் உத்தரவிடுவதை சன் டிவி ஏற்குமா என்பது தெரியவில்லை.நடிகர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள சரத்குமார் திமுகவில் இருந்துவிலகியதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விஜய்யை சன் டிவி ரொம்பதூக்கிவிடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

    By Staff
    |

    சன் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ள தனது நிகழ்ச்சியைநிறுத்துமாறு நடிகர் சங்கத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாக நடிகர் விஜய்கூறியுள்ளார்.

    தொலைக்காட்சிகளுக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் யாரும் பேட்டியோ,நிகழ்ச்சிகளோ நடத்தித் தரக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்தனியார் தொலைக்காட்சிகளின் தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நடிகர்,நடிகைகளின் சமீபத்திய பேட்டிகள் இடம் பெறவில்லை.

    பழைய நிகழ்ச்சிகளுக்கு புது உருவம் கொடுத்தும், மலையாள, தெலுங்குத்திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பவும் சன், ஜெயா,ராஜ் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் முடிவு செய்துள்ளன.

    இந் நிலையில் சன் டிவியின் நிகழ்ச்சி நிரலில் விஜய்யின் நிகழ்ச்சியும்இடம்பெற்றுள்ளது. இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், நடிகர்கள் யாரும் எந்தத் தொலைக்காட்சிக்கும் பேட்டி தரக் கூடாது என்றநடிகர் சங்கக் கட்டுப்பாட்டின்படி நான் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் சமீபகாலமாகபேட்டி கொடுக்கவில்லை.


    ஆனால் நான் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியான ஆதி படத்துக்காக சன்தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியை இப்போது தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒளிபரப்பஇருக்கிறார்கள் என்று அறிகிறேன்.

    ஆகவே நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டின்படி இதை நிறுத்தி, தடை செய்வதற்கானமுழு அதிகாரத்தையும் நடிகர் சங்கத் தலைவர், செயலாளருக்கு தருகிறேன் என்றுகூறியுள்ளார் விஜய்.

    ஆனால் நடிகர் சங்கம் உத்தரவிடுவதை சன் டிவி ஏற்குமா என்பது தெரியவில்லை.

    நடிகர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள சரத்குமார் திமுகவில் இருந்துவிலகியதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விஜய்யை சன் டிவி ரொம்பதூக்கிவிடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X