ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கில்லி படம் வசூலில் எகிறிக் கொண்டிருப்பதில் மிக குஷியாக இருக்கிறார் நடிகர் விஜய்.

கடந்த இரண்டு வருடங்களாக யூத், பகவதி, வசீகரா, கீதை என வரிசையாக தோல்விப் படங்கள் கொடுத்து விஜய்இறங்கு முகத்தில் இருந்தார்.

இன்னொரு பக்கம் விக்ரம், சூர்யா வெற்றிப் படங்களைக் கொடுத்து கிடுகிடுவெனமுன்னுக்கு வந்து விட்டனர்.

போட்டி அதிகமாகவே வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சமயத்தில்தான் திருமலை படம் கைகொடுத்தது.

அந்தப் படத்தின் மூலம் சற்று நிமிர்ந்தவருக்கு, கில்லி படம் காலரைத் தூக்கிவிட வைத்துள்ளது.

தமிழில் சேஸிங் காட்சிகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எதுவும் பெருத்த வெற்றி பெற்றதில்லை.முதன்முறையாக கில்லி இயக்குனர் தரணியின் திரைக்கதையால் அத்தகை புண்ணியத்தைப் பெற்றுள்ளது.

படத்தில் நிஜ ஹீரோ தரணியும், ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும் தான். தரணியின் திரைக்கதையில் இருக்கும் புல்லட்வேகத்தை கோபிநாத்தின் கேமரா அற்புதமாக படம் பிடித்துள்ளது.


எந்த இடத்தில் தொட்டாலும் என் கில்லிஎகிறுவான் என்று தரணி கூறியிருந்ததுபோலவே, கில்லி எகிறியிருக்கிறது.

ஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் எதுவும் வெளிவராததும், கில்லிபடத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாகி விட்டது. விஜயை மட்டுமல்ல, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தையும் இந்தப் படம்தூக்கி விட்டுள்ளது.


பெரிய பட்ஜெட்டில் தயாரித்த எனக்கு 20 உனக்கு 18, பாய்ஸ் படங்கள் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்ததால்,ரத்னத்துக்கு துட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதாம். இப்போது கில்லி படத்துக்கு நாலா பக்கமிருந்தும் பாஸிடிவ் ரிசல்ட்வந்து கொண்டிருப்பதில் மனிதர் சற்றுத் தெம்பாக காட்சியளிக்கிறார்.

இதற்கிடையே கில்லி வெற்றியைக் காரணமாக வைத்து, சம்பளத்தில் சில லகரங்களைக் கூட்டலாமா என்றுயோசித்து வருகிறாராம் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X