ஹீரோ .. ஹீரோ ..
இயக்குநர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் விஜய்,தற்போது கவிதாலயா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
முன்பு ஒருமுறை கவிதாலயாவின் படம் ஒன்றை தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்தது தொடர்பான தகராறில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும்,பாலச்சந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கவிதாலயா தயாரிப்பில் நடிக்கவிருந்த விஜய்யின் படம் ஒன்று கைவிடப்பட்டது.
இந்நிலையில் விஜய்க்கும், கவிதாலயாவுக்கும் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கியுள்ளது. கவிதாலயா தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
தற்போது விஜய் நடித்து வரும் "வசீகரா" படம் முடிவடைந்து விட்டது. "கீதை" என்ற படம் தொடங்கியுள்ளது. "வசீகரா" பொங்கலுக்கும், "கீதை"தமிழ்ப் புத்தாண்டுக்கும் ரிலீஸ் ஆகின்றன.
"கீதை" படத்தை முடித்துக் கொடுத்த பிறகுதான் கவிதாலயா படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. இயக்குனரும்முடிவாகவில்லை.
இந் நிலையில் "கீதை" பட டைட்டிலுக்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்ப்புவலுத்தால் தலைப்பு மாறலாம்.


Click it and Unblock the Notifications











