ஹீரோ .. ஹீரோ ..
விஜய்யையும் அஜீத்தையும் சேர்த்து நடிக்க வைக்கும் முயற்சிகளில் சில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விஜய், அஜீத் ஆகியோர் பாப்புலர் ஆகாத ஆரம்ப காலத்தில் இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர்.இளையராஜாவின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தும் அந்தப் படமும் பெரிதாகப் பேசப்படவில்லை.
அதன் பிறகு இருவரும் தனித்தனி டிராக்கில் பயணித்து இன்று எங்கோ போய்விட்டனர்.
இப்போது இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க இளம் கலைஞர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கமலுக்கும், ரஜினிக்கும் பிடித்த படமாக இன்றளவும் "நினைத்தாலே இனிக்கும்"தான் இருந்து வருகிறது.
அதுபோல விஜய்க்கும், அஜீத்திற்கும் பெயர் சொல்லும் அளவுக்கு இந்தப் படம் அமைய வேண்டும் என்று அந்தநண்பர்கள் மெனக்கெட்டு வருகிறார்களாம்.
கதையை ஒருபுறம் தயார் செய்து கொண்டிருந்தாலும் விஜய்,அஜீத்தின் சம்மதத்தைப் பெறும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











