ஹீரோ .. ஹீரோ ..
விஜயகாந்த் நடித்துள்ள சமீபத்திய படமான நரசிம்மா, தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத மார்கெட் வைத்துள்ள விஜயகாந்த், தனது சொந்தப் படமானநரசிம்மாவை தெலுங்கிலும் திரையிடுகிறார். ஆனால் படத்தின் பெயர் அங்கு சல்யூட் என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினி நடித்த படையப்பா படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு நரசிம்மா என்று பெயர் வைத்து விட்டதால்சல்யூட் என்று மாற்றியுள்ளனர்.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருந்த திருப்பதிசாமி விபத்தில் பலியாவதற்கு முன் எடுத்தகடைசிப் படம் என்பதால் இந்தப் படம் நிச்சயம் அங்கு நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தெலுங்குப் பதிப்பில் கூடுதல் சண்டைகள், டான்ஸ்களைச் சேர்த்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு 50 நேரடிபிரிண்ட்களை தெலுங்குக்காக எடுத்துள்ளனர். தமிழில் 135 பிரிண்ட் போட்டுள்ளனர்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நரசிம்மா சாதனை படைக்கும் என்று விஜயகாந்த்தும், படத்தின் இன்னொருதயாரிப்பாளரான விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷும் எதிர்பார்க்கிறார்கள்.
விஜயகாந்த் படங்களில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











