ஹீரோ .. ஹீரோ ..
தவசி படத்தில் விஜயகாந்த்திற்காக கவிஞர் பா.விஜய் அட்டகாசமான (விஜய்காந்துக்கு!) பாடல் ஒன்றைஎழுதியுள்ளார்.
விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது தனிச் சிறப்புகள் குறித்தும் இந்தப் பாடலில் மறைகமாககூறப்பட்டுள்ளது.
பாடலை பா.விஜய் எழுதிக் காட்டியதும், விஜயகாந்த் ரொம்பவே குஷியாகி விட்டாராம். இந்தப் பாடலை படத்தில்தான் அறிமுகமாகும் காட்சியில் வைக்கச் சொல்லியுள்ளாராம்.
சரி பாட்டைப் பார்ப்போமா?
தஞ்சாவூப் கோபுரந்தான்
தலைப்பாகை கட்டிக் கொண்டு
நடை நடந்து வாரதைப் போல்
நம்ம அய்யா வராரு
சாதி சாதிக்கொரு
சங்கம் வச்ச நாட்டுக்குள்ளே
எல்லா சாதிக்கொரு
கோயில் போல வாராரு
சங்கத் தமிழ்நாட்டு
சிங்கத் தமிழன் வாராரு
கறுப்புச் சூரியனா
கம்பீரமா வாராரு
ஏழை சனங்களுக்கு
பங்காளியா வாராரு
வாரிக் கொடுப்பதுல
வரலாறா வாராரு
அய்யா ஊர்வலத்துல
ஆரத்தி எடுக்கத்தான்
ஆகாச சூரியனே
ஆசப்படும் நீ பாரு
சொன்னா சொன்ன சொல்லில்
கடைசி வரை நிப்பாரு
நின்னா நின்ன எடம்
நிச்சயமா ஜெயிப்பாரு!


Click it and Unblock the Notifications











